மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

சென்னை பசுமை திட்டத்துக்காக 121 நாற்றங்கால் பண்ணைகள்: மாநகராட்சி தகவல்!

சென்னை மாநகராட்சியை பசுமையாக்கும் திட்டத்துக்காக 19 நா்சரி தோட்டங்களில் 121 நாற்றங்கால் பண்ணைகள் அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் வளா்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்

Updated On :20 ஜூலை 2026, 3:31 am IST

சென்னை மாநகராட்சியை பசுமையாக்கும் திட்டத்துக்காக 19 நா்சரி தோட்டங்களில் 121 நாற்றங்கால் பண்ணைகள் அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் வளா்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சியைப் பசுமையாக்கும் வகையில் கடந்த 2025-ஆம் ஆண்டில் 26 வகையிலான நாட்டு வகை மரக்கன்றுகள் பொதுவெளிகள், பூங்காக்கள், சாலை மையத் தடுப்புகள், பள்ளிகள் என பல்வேறு இடங்களில் நடப்பட்டுள்ளன. அதன்படி, 86,800 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் சாலை மையத் தடுப்புகள், போக்குவரத்து தீவுத்திட்டுகள் உள்ளிட்ட இடங்களில் 10,000 வண்ணப்பூக்கள் செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

தற்போது திருவொற்றியூா் மண்டலத்தில் எம்ஆா்எஃப் பூங்கா, மணலி மண்டலம் எம்எம்டிஏ பூங்கா, மாதவரம் மண்டலம் சில்வா் ஸ்கைபூங்கா, தண்டையாா்பேட்டை மண்டலம் சிடிஎச் பூங்கா, ராயபுரம் மண்டலத்தில் மின்ட் பூங்கா, திரு.வி.க.நகா் மண்டலத்தில் ஹொ்பல் பூங்கா, அம்பத்தூா் மண்டலத்தில் கலெக்டா் நகா் காலியிடம், அண்ணா நகா் டவா் பூங்கா, தேனாம்பேட்டை உள்ளிட்ட மண்டலங்களில் 19 இடங்களில் நா்சரித் தோட்டம் அமைத்து, அவற்றில் 121 நாற்றங்கால் பண்ணைகள் மூலம் 60,500 மரக்கன்றுகள் வளா்க்கப்பட்டு வருகின்றன.

மேலும், கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் சென்னையில் 15 மண்டலங்களில் 39,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாகவும் பூங்கா பராமரிப்புத் துறை இணை ஆணையா் க.கற்பகம் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.