ஆண்ட்ராய்டு அலைபேசிகள் விதவிதமான மாடல்களில், விலைகளில், வசதிகளில் சந்தையில் இருந்தாலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனுக்கு இருக்கும் மவுசு குறையாதது. ஐபோன் வாங்கத் திட்டமிடுவது பல மாதங்களுக்குச் சம்பளத்தின் ஒரு பகுதியை ஒதுக்குவதற்குச் சமமானது.
இந்த நிலையில், ஆன்லைன் விற்பனை தளங்கள் அறிவிக்கும் தள்ளுபடியைப் பயன்படுத்தி வாங்கும்போது பட்ஜெட்டில் கணிசமாக மிச்சமாகும்.
ஃபிளிப்கார்டு விற்பனை இணையதளம், ஐபோன் 14 மற்றும் 14 பிளஸ் மாடல்களுக்கு ஆப்பிள் அதிகாரபூர்வ இணையதள விலையை விட ரூ.15,000 வரை குறைவாக நிர்ணயித்து தள்ளுபடி விலையில் விற்பனை செய்து வருகிறது.
ஐபோன் 14 மாடலின் விலை ரூ.69.900/ பிளிப்கார்டில் ரூ.57,999/ முதல் இது விற்பனைக்குக் கிடைக்கிறது.
ஐபோன் 14 பிளஸ் ஷோ-ரூம் விலை ரூ.79,900/ ஃபிளிப்கார்டில் ரூ.64,999/- ஆக குறைந்துள்ளது.
மேலும் ஹெச்டிஎஃப்சி வங்கி கடன் அட்டை இஎம்ஐ மூலம் வாங்குபவர்கள் கூடுதலாக ரூ.750 வரை தள்ளுபடி பெற முடியும்.
ஐபோன் 13 வாங்க விரும்புபவர்கள், அமேசான் தளத்தைப் பார்வையிடலாம். ரூ.53,499 விலைக்குக் கிடைக்கும் இந்த அலைபேசியை வாங்கும்போது அமேசான் ஐசிஐசிஐ கடன் அட்டையை பயன்படுத்தினால் கூடுதலாக ரூ.2,409 வரை தள்ளுபடி பெற முடியும்.
இதையும் படிக்க: ஆப்பிள் நிறுவனத்திலிருந்து விலகும் ஐ-போன் வடிவமைப்பாளர்!
ஐபோன் 15 மாடல், ஃபிளிப்கார்டில் மிகக் குறைந்த விலையாக ரூ.72,900-க்கும் அமேசானில் ரூ.71,155-க்கும் குறிப்பிட்ட கடன் அட்டைகள் பயன்படுத்தி வாங்க முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் நாளில் கிராம மக்கள் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

இன்றைய ராசி பலன்கள் (24 ஏப்ரல் 2026) மேஷம் - மீனம்! பொறுப்புகள் கூடும் இந்த ராசிக்கு!

அக்னிப் பசி!

ஆடுகளுக்கு இலை பறிக்கச் சென்ற விவசாயி சோலாா் மின்சாரம் பாய்ந்து பலி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


