பெண்கள் மட்டும் படிக்க.. 5 முக்கிய தகவல்கள்

பெண்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் மிக முக்கிய சவாலாக இருப்பது பூப்பெய்தும் வயதுதான்.
பெண்கள் மட்டும் படிக்க.. 5 முக்கிய தகவல்கள்
பெண்கள் மட்டும் படிக்க.. 5 முக்கிய தகவல்கள்


புது தில்லி: பெண்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் மிக முக்கிய சவாலாக இருப்பது பூப்பெய்தும் வயதுதான். குழந்தையாக இருந்து சிறுமியாகும் வரை எந்த சிக்கலும் இருக்காது. சிறுமி பூப்பெய்தும் போது உடலில் ஏற்படும் மாற்றங்களை இயற்கையான முறையில் எதிர்கொள்ள பெண்கள் தயாராக வேண்டும்.

பூப்பெய்தும் பெண்கள், மாதந்தோறம் சந்திக்கும் மாதவிடாய் பிரச்னையை பலரும் பல வழிகளில் எதிர்கொள்கிறார்கள். சிலருக்கு இந்த மாதவிடாய் வட்டமானது இயல்பாக இருக்கும். சிலருக்கு மிகவும் கடினமானதாக மாறி மாறி வரும். 

இவற்றையெல்லாம் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக பெண்களுக்கு ஐந்து எளிய குறிப்புகள் நிபுணர்கள் வாயிலாக வழங்கப்பட்டுள்ளன.

எப்போதும் தயாராக..
பெண்கள் தங்களது மாதவிடாய் சுழற்சி பற்றி அறிந்திருந்தாலும் இல்லாவிட்டாலும் பள்ளி செல்லும் சிறுமிகளாக இருந்தால் எப்போதும் கைவசம் தயாராக இருக்கவும். சானிடரி நேப்கின், மாதவிடாய் கப் என எதைப் பயன்படுத்துகிறார்களோ அதனை எப்போதும் கூடுதலாக நமது கைப்பையில் வைத்திருப்பது மிகவும் நல்லது.

இதோடு, மாதவிடாய் காலங்களில் அதிக வயிற்று வலி இருப்பவர்கள் வலி நிவாரணிகளையும் கையில் வைத்துக் கொள்ளலாம். எதிர்பாராத வகையில் இக்கட்டான நிலையில் வயிற்று வலி வந்தால், மாத்திரைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
 

மாதவிடாய் சுழற்சியை அறிய
உங்களின் மாதவிடாய் சுழற்சியை முதலில் நீங்கள் கண்டறிய வேண்டும். ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் தொடங்கும் நாள், முடியும் நாளை தொடர்ந்து குறித்துக் கொண்டே வந்தால், உங்கள் சுழற்சி என்னவென்பது தெரிந்து கொள்ளலாம். அல்லது மாதவிடாய் சுழற்சிக்கான செயலி, காலண்டர் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் முன்கூட்டியே அனைத்தையும் திட்டமிட உதவும்.

மாதவிடாய்க்கு முந்தைய தொந்தரவுகள்
மாதவிடாய் நாள்களுக்கு முந்தைய தொந்தரவுகள் பலருக்கும் சித்ரவதையாகக் கூட இருக்கலாம். கை, கால்களில் வலி, ஒரு சோம்பல், கோபம் என அனைத்தும் ஒருங்கே வந்து ஒருவழிப்படுத்திவிடும். சிலருக்கு ஒவ்வொன்றாக வந்து ஒருவழியாக்கிவிடும். எனவே, அதனை சமாளிக்கக் கூட சூடான குளியல், ஹீட்டிங்பேட் போன்றவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம்.

உங்களை கவனியுங்கள்
மாதவிடாய் காலம் என்பது கடினமான காலம்தான். உடலளவிலும் மனஅளவிலும் பிரச்னை நிறைந்தது. எனவே, நன்றாக சாப்பிட்டு, தேவையான அளவுக்கு தண்ணீர் குடித்து ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். முடியாதவர்கள் அந்த நாள்களை எதிர்கொள்ள உங்கள் உடலுக்குத் தேவையான சத்தான உணவு மற்றும் நீரைப் பருகுங்கள். யோகா செய்வது, நல்ல சூரிய வெளிச்சம் படும்படி இருப்பது போன்றவற்றின் மூலம் உடலுக்கு புத்துணர்ச்சி பெறுங்கள்.

மனம் விட்டுப் பேசுங்கள்
உங்கள் மாதவிடாய் பிரச்னைகள் குறித்து மனம் விட்டுப் பேசுங்கள். உங்கள் ஆசிரியர், பெற்றோர், தோழிகளிடம் சொல்லுங்கள். மருத்துவரின் ஆலோசனையையும் பெறலாம். மாதவிடாய் காலங்கள் ஏற்படும் மன அழுத்தத்தை நிவர்த்தி செய்ய நிச்சயம் ஆலோசனை பெறுவதில் தவறே இல்லை. இது எல்லோருக்கும் வருவதுதான் என்று விட்டுவிடாமல், தேவையான சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்கிறார்கள் நிபுணர்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com