இந்திய மருத்துவரை கட்டியணைத்த துருக்கிப் பெண்: இதயங்களை வென்ற புகைப்படம்
சண்டிகர்; துருக்கியில் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள இந்தியாவிலிருந்து ஏராளமான குழுவினர் விரைந்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் உருகுலைந்த பகுதிகளில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, தவிக்கும் மக்களின் கண்ணீரைத் துடைக்க நிவாரணப் பொருள்களுடன் 'தோழரே நாங்கள் இருக்கிறோம்' என்ற பெயரில், இந்திய மருத்துவர்கள், மீட்புப் படையினர் கொண்ட பெரிய குழு துருக்கியில் தரையிறங்கி உடனடியாக மீட்புப் பணியை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், ஆபரேஷன் தோஸ்ட், வி கேர் என்று பதிவிட்டு ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிக்க.. நிலநடுக்கத்தின் துயரக் காட்சி: இறந்த மகளின் கைகளை பற்றியபடி தந்தை
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு சிகிச்சை அளித்து வரும் இந்திய ராணுவ பெண் மருத்துவருக்கு, அங்குள்ள துருக்கிப் பெண் ஒருவர் கட்டியணைத்து முத்தமிடும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. பல லட்சம் பேரால் பார்வையிடப்பட்ட அந்தப் புகைப்படத்தை பலரும் கொண்டாடி வருகிறார்கள்.
துருக்கியில் தோழமை திட்டம் (ஆபரேஷன் தோஸ்த்) என்ற பெயரில் நிவாரணப் பணிகளை இந்தியா மேற்கொண்டுவருகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் நிலநடுக்கத்தால் குலைந்துபோயிருக்கும் கட்டடங்களில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் துரிதமாக செயல்பட்டு வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.