குழந்தைகளுக்கு தொண்டைவலி, இருமலா? வீட்டிலேயே இருக்கு வைத்தியம்

பொதுவாக குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கும் போது குழந்தைகளுக்கு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுவது வழக்கம்தான். சிலருக்கு வைரஸ் காய்ச்சல் கூட ஏற்படலாம்.
குழந்தைகளுக்கு தொண்டைவலி, இருமலா? வீட்டிலேயே இருக்கு வைத்தியம்
குழந்தைகளுக்கு தொண்டைவலி, இருமலா? வீட்டிலேயே இருக்கு வைத்தியம்

பொதுவாக குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கும் போது குழந்தைகளுக்கு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுவது வழக்கம்தான். சிலருக்கு வைரஸ் காய்ச்சல் கூட ஏற்படலாம்.

சென்னை உள்ளிட்ட பல பகுதிகளிலும் தற்போது வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்கள். சிலருக்கு தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல் ஏற்படுகிறது. சிலருக்கு இருமல் மற்றும் தொண்டைவலி மட்டும் ஏற்படுகிறது. இது ஓரிரு நாள்கள் என்றில்லாமல் ஓரிரு வாரங்கள் வரை நீடிக்கும் போதுதான் சிக்கல்.

குழந்தைகளுக்கு தொண்டைவலி மற்றும் இருமல் ஏற்பட்டால் வீட்டிலேயே கைவைத்தியம் செய்து, ஆண்டிபயாடிக்குகள் கொடுக்காமல் குணப்படுத்திடலாம்.

அதற்கு சிறந்த சில வைத்தியங்கள்..
1. எந்த மருந்தும் இல்லாமலேயே குணப்படுத்த முதல் வழி நீராவி பிடித்தல். தண்ணீரை நான்கு காய்ச்சி குழந்தைகளை நீராபி பிடிக்க வைத்தால் தொண்டை வலி மற்றும் இருமல் நிச்சயம் மட்டுப்படும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை ஆவி பிடிப்பது நல்ல பலனை அளிக்கும்.

2. அடுத்தது கைகண்ட மருந்து...
உண்மையிலேயே தொண்டை வலிக்கு இதைவிட சிறந்த மருந்தொன்று இல்லை என்றே சொல்லலாம். பலரும் மறந்து போன கைவைத்தியம். இந்த கரோனா காலத்தில் பலரின் உயிரையும் காப்பற்றியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. அதாவது உப்புத் தண்ணீரில் தொண்டைக்குள் செல்லாமல் உப்புத் தண்ணீரை கொப்புளித்துத் துப்பினால் எந்த கிருமியாக இருந்தாலும் சல்லிசல்லியாக உடைத்தெறியப்படும்.

இதையும் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் கைமேல் பலன் கிடைக்கும்.

3. வெறும் சுடுநீரே கைகண்ட மருந்துதான். அவ்வப்போது வெதுவெதுப்பான நீரைக் குடித்து வந்தாலே போதும். அதனுடன் தண்ணீரில் தேன் கலந்து குடிப்பது இன்னும் கூடுதல் பலனைக் கொடுக்கும். 

4. பலரும் இஞ்சி சாறு எடுத்து அதனை தேனுடன் கலந்து கொடுப்பதை பல ஆண்டுகாலமாக பின்பற்றி வருகிறார்கள். குழந்தைகள் குடிப்பார்கள் என்றால் இதையும் கொடுக்கலாம்.

5. மிளகு அல்லது இஞ்சி சேர்த்து தேநீர் செய்து கொடுக்கலாம். இதனுடன் சிறிது துளசி சாறு சேர்த்து தேநீர் கலந்தும் கொடுக்கலாம். இவை நிச்சயம் தொண்டை வலி மற்றும் இருமலை குணப்படுத்தும்.

6. அவ்வப்போது ஒரு சில மிளகுகளை வாயில் வைத்துக் கடிக்கக் கொடுத்தால் அது தொண்டையில் ஏற்படும் வலியைக் குறைத்து நெஞ்சு சளியைக் கரைத்து இருமலை மட்டுப்படுத்தும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com