சிறுநீரக செயலிழப்பை எவ்வாறு தடுப்பது?

சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருந்து தேவையற்ற கழிவுகளை பிரித்து சிறுநீர் மூலம் உடலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருந்து தேவையற்ற கழிவுகளை பிரித்து சிறுநீர் மூலம் உடலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது. சிறுநீரகங்கள் வேலை செய்வதை நிறுத்தினாலோ, அதன் வேலையைச் செய்ய முடியாமல் போனாலோ, அது சிறுநீரக செயலிழப்பு என்று அழைக்கப்படுகிறது.

சிறுநீரக செயலிழப்பைத் தடுப்பதற்கான சில குறிப்புகள்

உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயானது சிறுநீரக செயலிழப்புக்கு மிகவும் பொதுவான காரணங்களாக உள்ளது. இந்த இரண்டு பிரச்னைகளை நிர்வகித்தாலே சிறுநீரக செயலிழப்பைத் தடுக்க முடியும்.

1. ரத்த சர்க்கரையை நிர்வகிக்கவும்

நீரிழிவு நோயானது இதய நோய் மற்றும் சிறுநீரக செயலிழப்புக்கான ஆபத்தை அதிகரிக்கிறது.  இதனால் ரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க வேண்டும்.

2. ரத்த அழுத்தத்தை நிர்வகிக்கவும்

உயர் ரத்த அழுத்தமானது இதய நோய் மற்றும் சிறுநீரக செயலிழப்புக்கான ஆபத்தை அதிகரிக்கிறது.

3. ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும்

நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற சிறுநீரக செயலிழப்புடன் தொடர்புடைய பிரச்னைகளுக்கு உடல் பருமனானது ஆபத்தை விளைவிக்கிறது

4. இதயத்திற்கு ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்

இதய ஆரோக்கியத்திற்கு குறைந்த சர்க்கரை, குறைவான கொழப்பு சத்து,  அதிக நார்ச்சத்து, முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் உண்பது நல்லது. இவற்றை உண்பதால்  எடை அதிகரிப்பதை தடுக்க முடியும்.

5. உப்பு உட்கொள்ளலைக் குறைக்கவும்

அதிக உப்பு சாப்பிடுவது உயர் ரத்த அழுத்ததை அதிகரிக்கும்.

6. போதுமான தண்ணீர் குடிக்கவும்

நீரிழப்பானது சிறுநீரகங்களின் ரத்த ஓட்டத்தை குறைக்கிறது. ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவரிடம் கேட்டு குடிக்க வேண்டும்.

7. மதுவைக் கட்டுப்படுத்துங்கள்

ஆல்கஹால் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதில் உள்ள கூடுதல் கலோரிகள் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.

8. புகை பிடிக்காதீர்கள்

புகைபிடித்தல் சிறுநீரகங்களின் ரத்த ஓட்டத்தை குறைக்கிறது. மேலும் புகைபிடித்தல் ஆனது சிறுநீரகங்களின் செயல்பாட்டையும்  குறைக்கிறது

9. மன அழுத்தத்தைக் குறைக்கவும்

மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைத்தால்  ரத்த அழுத்தத்தை குறைக்கலாம். இது சிறுநீரகத்திற்கு நல்லது.

10. தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்

நீச்சல், நடைபயிற்சி மற்றும் ஓடுதல் போன்ற உடற்பயிற்சிகள் மன அழுத்தத்தைக் குறைக்கவும், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், ஆரோக்கியமான எடையைப் பராமரிக்கவும் உதவுகிறது

சிறுநீரக நோய் இருக்கலாம் என்று நினைத்தால்,  உடனே மருத்துவரைப் பார்ப்பது முக்கியம். ஆரம்பகால நோயறிதல் மற்றும் சிகிச்சையானது சிறுநீரக செயலிழப்பை தடுக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com