டேட்டிங்கில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்னென்ன?

இன்றைய நவீன வாழ்க்கைச் சூழலில் டேட்டிங் என்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது. இதற்காக பல செயலிகளும் இணையதளங்களும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
டேட்டிங்கில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்னென்ன?

இன்றைய நவீன வாழ்க்கைச் சூழலில் டேட்டிங் என்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது. இதற்காக பல செயலிகளும் இணையதளங்களும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. அதாவது முன்னதாக பொதுவெளியில் ஒருவரை சந்தித்து பின்னர் பழகுவது மாறி, இன்று டேட்டிங் செயலியில் தனிப்பட்ட நபர்களின் விவரங்களை பார்த்து தெரிந்துகொண்டு அவர்களுடன் பழக்கம் ஏற்படுத்திக்கொள்வது. 

சிலருக்கு டேட்டிங் நல்ல அனுபவங்களையும் கொடுக்கிறது என்கிறார். சிலர் டேட்டிங் மூலமாக சரியான நபரைக் கண்டறிந்து காதலிக்கவும் செய்கிறார்கள். அவ்வாறு முதலில் ஒருவருடன் டேட்டிங் செல்லும்போது என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது?

1. முதலில் நீங்கள் எதை விரும்புகிறீர்கள், உங்களுக்கு என்ன தேவை என முடிவு செய்து எதிர்நாபரிடம் தெரிவித்து விடுங்கள். நீங்கள் எந்த எல்லை வரை சென்று பழக விரும்புகிறீர்கள் என்று கூறிவிடுங்கள். 

2. பேச்சு, பாலியல் எல்லைகள், பிரேக்அப் ஆகியவற்றில் தெளிவாக இருங்கள்.

3. உங்கள் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்க எதிர் நபர் எப்படி என்று முன்கூட்டியே தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். இருவருக்கும் ஒத்துப்போனால் டேட்டிங் செல்லலாம். 

4. முதல் சந்திப்பிலேயே நான் அப்படி இப்படி என்று பேச வேண்டாம், மிகவும் இயல்பாக இருங்கள். படிப்படியாக உங்கள் விஷயங்களை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

5. டேட்டிங்கில் இருக்கும்போது ஆரோக்கியமான உறவை பேணுங்கள்.முதலில் நட்பாக பழகுங்கள், பின்னர் பிடித்திருந்தால் பரஸ்பரமாக அடுத்த நிலைக்குச் செல்லலாம், மாறாக எடுத்த எடுப்பிலேயே காதல், கற்பனை எல்லாம் சரியாக இருக்காது. 

6. உங்களின் எதிர்பார்ப்பு குறித்து உங்கள் எதிராளியிடமும் பேசி விடுங்கள்.

7. உங்கள் உறவின் காலத்தையும் முதலில் பேசி நிர்ணயித்துக்கொள்ளுங்கள். அதாவது குறுகிய கால உறவா? நீண்ட காலத்துக்கு கொண்டுசெல்ல விரும்புகிறீர்களா? என்று முடிவு செய்து கொள்ளுங்கள். 

 8. உங்கள் உறவு குறித்து தொடர்ச்சியாக சம்மந்தப்பட்டவரிடம் பேசுவதும், நேர்மையாக உரையாடுவதும் அவசியம். இது எதிர்பார்ப்புகளை தெளிவுபடுத்தவும், உறவில் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்கவும் உதவும்.

9. எதிர் நபர் எப்படி மதிக்கப்பட வேண்டும், எப்படி நடத்தப்பட வேண்டும் என்று இருவருமே எல்லைகளை நிர்ணயிக்க வேண்டும். 

10. ஒருவேளை உறவு நீடிக்கவில்லை எனில், இருவரும் ஒருமனதாக முடிவு செய்து விலகிவிட வேண்டும். ஒருவருக்கு விருப்பமில்லை எனினும் அந்த உறவுக்கு பலனில்லை. எனவே, அந்த முடிவை மதித்து மற்றொருவர் விட்டுக்கொடுக்க வேண்டும். 

11. இறுதியாக அனைத்து விதத்திலும் உங்களுக்கு நீங்கள் நேர்மையாக இருங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com