நம்பிக்கையும் உண்மையும்: தடுப்பூசிகள் பாதுகாப்பானதா? அவசியம்தானா?

பல்வேறு நோய்கள் வராமல் தடுக்க பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகள் பாதுகாப்பானதா? அவற்றை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டுமா? தடுப்பூசி பரிந்துரைக்கப்படும் நோய்கள் தீவிரமானவையா? 
கோப்புப்படம்
கோப்புப்படம்

பல்வேறு நோய்கள் வராமல் தடுக்கப் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகள் பாதுகாப்பானதா? அவற்றை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டுமா? தடுப்பூசி பரிந்துரைக்கப்படும் நோய்கள் தீவிரமானவையா? 

தடுப்பூசிகள் குறித்த தவறான நம்பிக்கைகளுக்கு பதில் அளிக்கிறார் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வைராலஜி பிரிவின் ஓய்வுபெற்ற பேராசிரியர் டாக்டர் ஜகோப் ஜான். 

நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், நெஞ்சு வலி போன்ற நோய்களுக்கு தடுப்பூசிகள் எடுக்க முடியாது. 

நோயின் நிலைமை மற்றும் வயதைப் பொருத்து பெரியவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இன்ப்ளூயன்சா மற்றும் நிமோகோக்கல் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும்  முக்கியமானவை, பாதுகாப்பானவை. மேற்கூறிய நிலைமைகள் உள்ளவர்கள் நிமோனியா பாக்டீரியாவால் இன்ஃப்ளூயன்ஸா, நிமோனியா போன்ற சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள். அதனால் இந்த தடுப்பூசிகள் அவர்களுக்கு உதவும். 60 வயதுக்குக் குறைவானவர்கள் தடுப்பூசிகள் தேவையான என்பதை அறிய மருத்துவரை அணுகவும்.

தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்படும் நோய்கள் பெரும்பாலும் தீவிரமானவை அல்ல.

ஒவ்வொரு தடுப்பூசியும் நோயைத் தடுக்கக்கூடிய அளவுக்கு தீவிரமானது. ஒவ்வொரு நோய்க்கும் லேசான, கடுமையான, உயிருக்கு ஆபத்தான என நிலைகள் உள்ளன. அதனை நாம் கணிக்க முடியாது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு இதன் தன்மை அதிகரிக்கிறது. இதில் தீவிரமாக பாதிக்கப்படுபவர்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையில்தான். இந்த அபாயங்களை எட்ட எந்த காரணங்களும் இல்லை. 

மருந்து நிறுவனங்களுக்கு பயனளிக்கவே அரசு தடுப்பூசிகளை வழங்குகிறது. 

உணவு, உடை போன்ற அத்தியாவசியப் பொருளாக தடுப்பூசியையும் நினைத்துப் பாருங்கள். உற்பத்தியாளர்களும் சரி, சந்தைப்படுத்துபவர்களும் சரி ஓரளவு லாபம் ஈட்டுவார்கள். 

டிப்தீரியா, கக்குவான் இருமல், தட்டம்மை போன்றவற்றைத் தடுக்க தடுப்பூசிகள் தேவை. அதிகம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டதால்தான் போலியோ முற்றிலும் அகற்றப்பட்டது. தேசிய நோய்த் தடுப்புத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட தடுப்பூசிகளை அரசுகள் வழங்குவதன் மூலமாக இறப்புகள் மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது குறைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com