சருமப் பராமரிப்புக்கு சந்தனம்! எப்படி பயன்படுகிறது?

சந்தனம், பழங்காலம் முதல் இப்போதுவரை அழகுக்காக பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சந்தனம், பழங்காலம் முதல் இப்போதுவரை அழகுக்காக பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இன்று பெரும்பாலானோர் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருள்களில் சேர்க்கப்பட்டு வருகிறது. 

பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய மருத்துவப்பொருளாக பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது சந்தனம். 

சந்தனம் பயன்படுத்துவதால் சிலருக்கு அழற்சி ஏற்படலாம். எனவே உடலின் சிறு பகுதியில் சந்தனத்தை பயன்படுத்தி சோதனை செய்த்க்கொள்வது நல்லது. சென்சிடிவ் சருமம் கொண்டவர்கள் கண்டிப்பாக ஒருமுறை பயன்படுத்தி எதிர்மறை விளைவுகள் இருக்கிறதா என பார்த்துவிட்டு பயன்படுத்தலாம். 

சருமப் பராமரிப்புக்கு சந்தனம் எவ்வாறு உதவும்? 

சரும ஈரப்பத்திற்கு...

சந்தன எண்ணெய் ஒரு சிறந்த இயற்கையான மாய்ஸ்சரைசர். இது சருமத்தை நீரேற்றம் செய்ய உதவுகிறது. சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கிறது. வறண்ட சருமம் உள்ளவர்கள் பயன்படுத்தலாம். 

இளமையாக இருக்க...

சந்தனத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. அவை ஃப்ரீ ரேடிக்கல்ஸை எதிர்த்துப் போராட உதவுகின்றன. இதனால் சீக்கிரம் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. மேலும் வயதான தோற்றம் ஏற்படுவதையும் தடுக்கிறது. 

கரும்புள்ளிகள் மறைய...

சந்தனம் தோல் நிறமிகளை ஒளிரச் செய்யும். தழும்புகள், வடுக்கள் மற்றும் கரும்புள்ளிகளைக் குறைக்கப் பயன்படுகிறது. இதனால் சருமம் பொலிவடைகிறது. 

சருமத்தை இறுக வைக்க.. 

சந்தனம் சருமத்தை இறுக்க உதவுகிறது. எண்ணெய்ப் பசை சருமம் அல்லது கலவையான சருமம் கொண்டவர்களுக்கு இது உதவும்.  ஏனெனில் இது சருமத்தில் அதிகப்படியான எண்ணெயைக் குறைக்கவும், துளைகள் அதிகம் இருந்தால் அவற்றைக் குறைக்கவும் உதவும். 

பாக்டீரியாக்களை எதிர்க்க...

சந்தனத்தில் இயற்கையான கிருமி நாசினிகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. இது தோலில் ஏற்படும் தொற்றைத் தடுக்கிறது. முகப்பருக்கள் வராமல் தடுக்கவும் வந்தால் அவற்றைக் குறைக்கவும் உதவும். சருமத்தை சுத்தப்படுத்த சந்தனம் ஒரு சிறந்த கிருமிநாசினி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com