
உடல் பருமன் அல்லது உடல் எடை அதிகரித்தல்...
இன்றைய நவீன காலகட்டத்தில் பலருக்கும் காணப்படும் ஒரு பிரச்னை. நவீன உணவுகள், உடல் இயக்கமின்மை உள்ளிட்ட காரணங்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். அதிலும் சமீபமாக பெண்களுக்கு உடல் பருமன் பிரச்னை அதிகம் காணப்படுகிறது.
உடல் எடையைக் குறைக்க முதல் வழி உணவுக் கட்டுப்பாடுதான். கார்போஹைட்ரேட் உணவுகளைக் குறைத்து, புரோட்டீன், நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
அந்தவகையில் சில வெள்ளை உணவுப் பொருள்களை முற்றிலுமாக தவிர்ப்பதன் மூலமாக உடல் எடையைக் குறைக்கலாம்.
அரிசி
சாதாரணமாக உணவுக்காக வெள்ளை அரிசிதான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதில் கார்போஹைட்ரேட் அதிகம். நார்ச்சத்து குறைவு. எனவே, டயட்டில் இருப்பவர்கள் சிவப்பு அரிசியை பயன்படுத்தலாம்.
சர்க்கரை
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வெள்ளைச் சர்க்கரையை கண்டிப்பாக சேர்க்கக்கூடாது. இதில் கலோரி அதிகம் உள்ளது. பதிலாக கருப்பட்டி, வெல்லம் ஆகியவற்றை அளவாகப் பயன்படுத்தலாம்.
இதையும் படிக்க | அதிகாலை நடைப்பயிற்சி நல்லதல்ல! இதய நோயாளிகளுக்கு எச்சரிக்கை!!
மயோனஸ்
சாட் உணவுகள், பாஸ்ட் புட், அசைவ உணவுக் கடைகளில் சைடு டிஷ்ஷாக மயோனஸ் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக சான்ட்விச், பிரெட் ஆம்லெட், க்ரில்டு சிக்கன், தந்தூரி சிக்கன், பிஷ் பிங்கர் உள்ளிட்ட உணவுகளுடன் வழங்கப்படும் இந்த மயோனஸை டயட் இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.
பாஸ்தா
'ஒயிட் சாஸ் பாஸ்தா' உணவு இன்று பெரும்பாலானோரால் விரும்பப்படுகிறது. முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு சாஸ் செய்து பாஸ்தாவை வேகவைத்து அத்துடன் ஊற்றி செய்யப்படுகிறது. இதில் ஒயிட் பாஸ்தா மைதா உள்ளிட்ட மாவுகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. எனவே ஒயிட் பாஸ்தாவை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். கோதுமை மாவில் செய்யப்பட்ட பாஸ்தாக்களைப் பயன்படுத்தலாம்.
உப்பு
மிகவும் வெள்ளையாக இருக்கும் உப்புகளை பயன்படுத்துவதற்கு பதிலாக மங்கலான நிறமுடைய உப்புகளை அளவாகப் பயன்படுத்துங்கள். பிங்க் சால்ட், பிளாக் சால்ட் உள்ளிட்டவைகள் கடைகளில் கிடைக்கின்றன.
பால்
அதுபோல உடல் எடையைக் குறைக்க விரும்பினால் பால் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பதிலாக பிளாக் டீ, க்ரீன் டீ அருந்தலாம்.
குறிப்பாக இனிப்புகள் செய்ய பயன்படுத்தப்படும் கன்டன்ஸ்டு மில்க் எனும் அடர்த்தியான பாலை பயன்படுத்தக்கூடாது.
இதையும் படிக்க | சிறுநீரக பாதிப்புக்கு முகப்பொலிவு க்ரீம் காரணமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.