தலைமுடி பராமரிப்பு: குளிக்கும்போது இந்த 5 விஷயங்களைச் செய்யாதீங்க!!
By DIN | Published On : 19th January 2023 02:07 PM | Last Updated : 19th January 2023 02:07 PM | அ+அ அ- |

ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, தலைமுடி பராமரிப்பு என்பது அழகுப் முக்கியமான அவசியமான ஒன்று.
சுற்றுச்சூழல் மாசு, மன அழுத்தம், சரியான பராமரிப்பின்மை உள்ளிட்ட பல காரணங்களால் தலைமுடி உதிர்தல், முடி மெலிந்து காணப்படுதல், பொடுகு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன.
எனவே, முடிந்தவரை சத்தான உணவுகளை உட்கொள்வதுடன் தலைமுடி பராமரிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.
தலைக்கு குளிக்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய, தவிர்க்க வேண்டிய விஷயங்கள்...
♦ஷாம்பூவை தண்ணீரில் கலந்து ஸ்கால்ப் மற்றும் முடியில் அப்ளை செய்ய வேண்டும். ஸ்கால்பில் ஷாம்பூ இல்லாத அளவுக்கு நன்றாக தண்ணீர் விட்டு முடியை அலச வேண்டும். ரசாயனம் குறைந்த ஷாம்பூக்களை மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி பயன்படுத்தினால் பிரச்னை சரியாகும்.
♦ தலைக்கு குளிக்கும்போது குறைந்தபட்சம் தலையில் எண்ணெயாவது வைத்து குளிக்க வேண்டும். முடி வறட்சியாக இருக்கக் கூடாது.
இதையும் படிக்க | சருமம் ஜொலிக்க வேண்டுமா? வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய டிப்ஸ்!
♦தலைமுடி உதிர்வதைத் தடுக்க முட்டை வெள்ளைக்கரு, மருதாணி உள்ளிட்ட ஏதேனும் ஒரு இயற்கையான ஹேர் மாஸ்க்கை பயன்படுத்தலாம்.
♦ஷாம்பூ பயன்படுத்திய பின்னர் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். கண்டிஷனரை ஸ்கால்பில் படாதவாறு உபயோகிக்க வேண்டும். இல்லையெனில் முடி மிகவும் வறட்சியாகி உடைந்துவிடும்.
♦ தலைமுடி நன்றாக காய்ந்தபின்னரே சீப்பு பயன்படுத்த வேண்டும். ஈரத்துடன் பயன்படுத்தினால் முடியின் உறுதித்தன்மை குறைந்துவிடும். அதுபோல ஈரத்தில் பின்னல் போடக்கூடாது.
♦தலைமுடியை டவல் கொண்டு லேசாக துடைக்க வேண்டும். அழுத்தித் துடைக்கக்கூடாது.
♦ உடல் வெப்பநிலை அதிகரித்தாலும் முடி உதிர்தல் ஏற்படும். எனவே உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள சத்தான பழங்களை சாப்பிடலாம்.
♦ தலைமுடி வறட்சியைத் தடுக்க சீரம் பயன்படுத்தலாம்.
இதையும் படிக்க | தலைமுடி உதிர்தலுக்கான 10 முக்கிய காரணங்கள்