சருமம் ஜொலிக்க வேண்டுமா? வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய டிப்ஸ்!

சருமத்தைப் பாதுகாக்க சரும அழகைக் கூட்ட இன்று பலரும் அழகு நிலையங்களை நோக்கிச் செல்கின்றனர். ஏன் சிலர் இன்று சாதாரணமாக அறுவை சிகிச்சைகூட செய்து கொள்கின்றனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சருமத்தைப் பாதுகாக்க சரும அழகைக் கூட்ட இன்று பலரும் அழகு நிலையங்களை நோக்கிச் செல்கின்றனர். ஏன் சிலர் இன்று சாதாரணமாக அறுவை சிகிச்சைகூட செய்து கொள்கின்றனர். 

சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள இயற்கையாகவே பல வழிகள் உள்ளன.  இவ்வகையான இயற்கை முறைகள் எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது என்பதால் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். 

அந்தவகையில் சருமத்தைப் பாதுகாக்க வீட்டில் உள்ள இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தலாம். அந்த காலத்தில் பெண்கள் அழகுக்காக பயன்படுத்திய பொருள்கள் மஞ்சள், கடலைமாவு. இந்த இரண்டும் சரும அழகில் முக்கியமாகப் பயன்படுகின்றன. சருமத்திற்கு சோப்பு, க்ரீம் ஆகியவற்றிலும் மஞ்சள் சேர்க்கப்படுகிறது. 

எளிய குறிப்புக்கள்  

♦ கடலைமாவு, மஞ்சள், தயிர் இந்த மூன்றையும் கலந்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். 

♦ இதில் கடலைமாவுக்குப் பதிலாக பாசிப்பயறு மாவும் பயன்படுத்தலாம். இது சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி சருமத்தை பொலிவாக வைத்திருக்க உதவுகிறது. 

♦ கற்றாழை ஜெல் எடுத்து நன்றாக அலசிவிட்டு அத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பேக் போடலாம். 

♦ சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க பச்சரிசி மாவு பயன்படுத்தலாம். அதுபோல சிலருக்கு முழங்கை, கழுத்து, அக்குள் பகுதிகளில் கருமையாக இருக்கும். உடலில் கருமையாக இருக்கும் இடத்தில் பச்சரிசி மாவுடன் தயிர் சேர்த்து பயன்படுத்தலாம். 

♦ தக்காளி, பப்பாளி பழங்களை மசித்து முகத்தில் பேக் போடலாம். 

♦ முல்தானி மெட்டி பவுடரை தயிரில் கலந்து முகத்தில் போட்டு வர சருமம் பொலிவு பெறும். 

இதுதவிர அதிகம் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யுங்கள், இது உடலில் மெட்டபாலிசத்தை ஊக்குவித்து சருமம் பொலிவைத் தரும். மேலும், எண்ணெய்யில் பொரித்த உணவுகள், துரித உணவுகளையேத் தவிர்த்து ஊட்டச்சத்து மிக்க உணவுகள் குறிப்பாக பழங்கள், காய்கறிகள் அதிகம் எடுத்துக்கொண்டால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com