உடல் எடையைக் குறைக்கும் டயட் உணவுகள் என்னென்ன?

நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சத்துமிக்க உணவை உண்ணுதல், உடற்பயிற்சி மற்றும் மது, புகைப்பிடிப்பதைத் தவிர்த்தல் ஆகிய மூன்றையும் கடைப்பிடிக்க வேண்டும். 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

உடல் எடை அதிகரிப்பு இன்று மிகவும் சாதாரணமான பொதுவான விஷயமாக மாறிவிட்டது. ஆனால், நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சத்துமிக்க உணவை உண்ணுதல், உடற்பயிற்சி மற்றும் மது, புகைப்பிடிப்பதைத் தவிர்த்தல். இந்த மூன்றையும் கடைபிடித்தாலே போதுமானது. 

அதிலும் ஊட்டச்சத்துமிக்க உணவை அளவோடு எடுத்துக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். உடல் எடையை சரியாக நிர்வகிக்க உடற்பயிற்சி செய்தாலும் உண்ணும் உணவில் புரதம் அதிகம் இருக்க வேண்டும். உடலில் தேவையற்ற கொழுப்புகளைக் குறைக்கக்கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். 

உணவைப் பொருத்தவரை இன்று உடல் எடையைக் குறைக்க உடல் பருமன் கொண்டவர்கள் டயட்டில் இருக்க பலரும் முயற்சி செய்கிறார்கள். அந்தவகையில், உடல் எடையைக் குறைக்க சில உணவுகளை பரிந்துரைக்கின்றனர். 

♦ அனைத்து வகையான கீரைகள்

♦ முட்டை

♦ செர்ரி, ஸ்ட்ராபெரி, பிளாக் பெரி

♦ மத்தி, நெத்திலி மற்றும் சால்மன் மீன்

♦ சிக்கன் 

♦ காலிஃபிளவர், முட்டைகோஸ், தக்காளி, பிராக்கோலி, பீன்ஸ்

♦ க்ரீன் டீ, பிளாக் டீ, மூலிகை டீ

♦ டார்க் சாக்லேட்

♦ பருப்பு, பயறு வகைகள்

♦ மா, பலா, வாழை தவிர இதர பழங்கள்

♦ நட்ஸ் வகைகள் 

கார்போஹைடிரேட், கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்த்து புரதம் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகள், பொருந்தா மற்றும் துரித உணவுகளைத் தவிர்க்க வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com