தலைமுடி, சரும ஆரோக்கியத்துக்கு என்னென்ன சாப்பிட வேண்டும்?

தலைமுடி, சருமம், நகங்கள் ஆரோக்கியத்துக்கு என்னென்ன சாப்பிட வேண்டும்?
கோப்புப்படம்
கோப்புப்படம்

உணவுக்கும் உடலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதைப் போலவே உணவுக்கும் அழகுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. 

உடல் ஆரோக்கியம் போன்றே சரும ஆரோக்கியமும் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளைப் பொருத்தே இருக்கிறது. 

நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ அதுவே உங்களுடைய உடலிலும் சரும அழகிலும் வெளிப்படும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். 

அதன்படி காய்கறிகள், புரதம், வைட்டமின்கள் ஏ, பி, சி, துத்தநாகம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்த உணவுகளை உண்ணும்போது முடி உதிர்தல் குறையலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதுபோல கால்சியம், இரும்புச்சத்து குறைபாடு நகங்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம் என்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுவது தோலுக்கு பலனளிக்கும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

அந்தவகையில் தலைமுடி, சருமம், நகங்கள் ஆரோக்கியத்துக்கு என்னென்ன சாப்பிட வேண்டும்?

மீன்கள் 

மீன்களில் ஒமேகா 3 அமிலங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இது தலைமுடி மற்றும் சருமத்திற்கு அவசியமானது. ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் தோல் வீங்குதல், தோல் சிவந்து போதல் ஆகியவற்றைக் குறைக்க உதவும். மேலும் மீன்களில் புரதம் அதிகம் உள்ளது. 

இனிப்பு உருளைக்கிழங்கு

இனிப்பு உருளைக்கிழங்கில் கரோட்டினாய்டு (பீட்டா கரோட்டின்) நிறைந்துள்ளது. இதில் உள்ள வைட்டமின் ஏ, கரோட்டின்உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இது தோல் மற்றும் நக ஆரோக்கியத்திற்கு அவசியம். மேலும் இது ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டுள்ளது. 

நட்ஸ்

சூரியகாந்தி விதைகளில் பயோட்டின், புரதம், வைட்டமின் இ ஆகியவை நிறைந்துள்ளன. 

அதுபோல பாதாம், அக்ரூட் பருப்புகளில் வைட்டமின் இ உள்ளது. தோல் பிரச்னைகளில் இருந்து  உடலை பாதுகாக்க இவை உதவும். 

அவோகேடா 

அவோகேடாவில் வைட்டமின் சி, ஏ, இ ஆகியவை உள்ளன. இவை தோல் மற்றும் நக ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. வயதான தோற்றத்தைத் தடுக்க உதவுகிறது.

முட்டை

புரதம் அதிகம் நிறைந்து காணப்படும் உணவுப்பொருள் முட்டை. தலைமுடி பராமரிப்புக்கு தினமும் முட்டை எடுத்துக்கொள்வது அவசியம். 

கீரை  வகைகள் 

கீரைகள் ஒட்டுமொத்தமாக உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. முடி, தோல், நகங்களுக்கு நன்மை செய்யக்கூடிய ஏராளமான ஊட்டச்சத்துக்களை உடலுக்கு வழங்குகிறது. 

நீர்ச்சத்து மிக்க காய்கறி, பழங்கள் 

வெள்ளரி, தர்பூசணி, ஆப்பிள், தக்காளி, பாகற்காய், ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்ட நீர்ச்சத்து மிக்க காய்கறிகள், பழங்களை உணவில் தொடர்ந்து சேர்த்துவர வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com