கணினியில் வேலை செய்பவரா நீங்கள்?... இந்த பயிற்சிகளை கண்டிப்பாக செய்யுங்கள்!

தொழில்நுட்ப காலகட்டத்தில் மின்னணு சாதனங்களால் கண்களை அதிகம் தொந்தரவு செய்கிறோம். கண்களின் பாதுகாப்புக்கு அவ்வப்போது பயிற்சி அளிக்க வேண்டும்.
கணினியில் வேலை செய்பவரா நீங்கள்?... இந்த பயிற்சிகளை கண்டிப்பாக செய்யுங்கள்!

தற்போதைய தொழில்நுட்ப காலகட்டத்தில் கண்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. அதாவது கண்களை அதிகம் தொந்தரவு செய்கிறோம். கணினி, மொபைல்போன் என மின்னணு சாதனங்களால் கண் பிரச்னைகளும் அதிகரித்து வருகின்றன. எனவே இந்த சூழ்நிலையில் கண்களை பாதுகாப்பது என்பது அவசியமான ஒன்று. 

கணினியில் வேலை செய்பவர்கள் கண் பரிசோதனைகளை அவ்வப்போது கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும், மேலும் நீல நிற தடுப்புக் கண்ணாடிகளைப் பயன்படுத்தலாம். 

கண்களை அவ்வப்போது குளிர்ந்த தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். 

அடுத்து கண்களின் பாதுகாப்புக்கு அவ்வப்போது சில பயிற்சிகளை அளிக்க வேண்டும். 

என்னென்ன பயிற்சிகள்? 

பாஃமிங்

பாஃமிங் எனும் இந்த முறையில் முதலில் உங்கள் கண்களை மூடிக்கொண்டு அமைதியாக உட்கார்ந்து மூச்சை இழுத்துவிட வேண்டும். பின்னர் உங்கள் உள்ளங்கைகள் சூடாகும் வரை தீவிரமாக தேய்த்து மூடிய கண்களின் மீது மெதுவாக வைக்கவும். 

இதனால் கைகளில் இருந்து வெப்பம் கண்களால் உறிஞ்சப்பட்டு, கண் தசைகளுக்கு தளர்வு அளிக்கவும். 

கண் சிமிட்டுதல் 

கண்கள் ஆரோக்கியத்துக்கு கண்களை சிமிட்டுதல் என்பது மிகவும் அவசியமானது. கணினி, மொபைல் போன் பார்ப்பவர்கள் அவ்வப்போது கண்களை சிமிட்ட வேண்டும். 10 முறை சிமிட்டிய பின்னர் அரை மணி நேரம் கழித்து மீண்டும் செய்யலாம். இது கண்களில் உள்ள அழுத்தத்தைக் குறைக்கும். 

கண்களை சுழற்றுதல் 

அமைதியான நிலையில் உட்கார்ந்து தலையை அசைக்காமல் கண்களை மட்டும் சுழற்ற வேண்டும். இடமிருந்து வலமாக, பின்னர் வலமிருந்து இடமாக என இரு பக்கமும் ஒரு 3-5 நிமிடங்கள் வரை செய்யலாம். இது உங்கள் பார்வையை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது. 

மேல்-கீழ் அசைத்தல் 

இதிலும் நேராக அமர்ந்து தலையை அசைக்காமல் கண்களை மட்டும் மேலும் கீழும் அசைக்க வேண்டும். இதை ஒரு 10 முறை செய்யலாம். இதுவும் கண்களில் உள்ள அழுத்தத்தைத் குறைக்கும். 

இவ்வாறு ஏதேனும் ஒரு வகையில் கண்களுக்கு அசைவு கொடுக்க வேண்டும். கண் தொடர்பான யோகா பயிற்சிகளையும் முறைப்படி மேற்கொள்ளலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com