நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள்!

நீரிழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவை சரியாக பராமரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன?
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

இந்தியாவில்  நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி நாட்டில் 10 கோடி பேருக்கு நீரிழிவு நோய் இருப்பதாகவும் நீரிழிவு நோய் ஏற்பட 13.6 கோடி பேருக்கு வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கவும் நீரிழிவு நோய் ஏற்பட்டால் ரத்த சர்க்கரை  அளவை கட்டுக்குள் வைக்கவும் முயற்சிக்க வேண்டும். 

இதற்காக உணவுப் பழக்கவழக்கங்களில் இருந்து தொடங்கி நமது வாழ்க்கை முறை தேர்வுகளில் மாற்றம் செய்ய வேண்டும்.

முழு உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் என சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வதுடன் நாள்தோறும் உணவுக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். 

ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் விழிப்புணர்வுடன் இருப்பது பல சிக்கல்களிலிருந்து உங்களைக் காப்பாற்றும்.

அந்தவகையில், நீரிழிவு நோயாளிகளுக்கு நிலையான ரத்த சர்க்கரை அளவை பராமரிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. அவ்வாறு சர்க்கரை அளவை சரியாகப் பராமரிக்க அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உணவில் அடிக்கடி சேர்க்க வேண்டும். 

நீரிழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவை சரியாக பராமரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன?

வெந்தயம்

இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இன்சுலின் அளவை சரியாக பராமரிக்கிறது. வெந்தயத்தை ஊறவைத்து பின்னர் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. 

கீரைகள் 

கீரைகளில் அதிக அளவு சத்துகள் உள்ளன. எனவே கீரைகளை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும். 

சியா விதைகள் 

புரதம், ஒமேகா 3, ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் இருக்கிறது. தயிர், ஸ்மூத்தி ஆகியவற்றில் கலந்து குடிக்கலாம். 

கொய்யா பழம்

பழங்களில் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த பழம் கொய்யா. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

புரோக்கோலி 

நார்ச்சத்து, வைட்டமின்,  தாதுக்கள் நிறைந்த காய்கறி என்பதால் நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம். 

ஓட்ஸ் 

ஓட்ஸில் கார்போஹைட்ரெட் குறைவாக இருப்பதுடன் பசி உணர்வை ஏற்படுத்தாது. தினமும் காலை உணவாக ஓட்ஸை எடுத்துக்கொள்ளலாம். 

நட்ஸ் 

பாதாம், வால்நட், பிஸ்தா ஆகியவற்றில் நார்ச்சத்து, புரதம், ஒமேகா 3 அமிலம் அதிகமுள்ளதால் தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com