சிவப்பு அரிசியின் நன்மைகள்!

சிவப்பு அரிசி புரதச்சத்து நிறைந்தது. கார்போஹைட்ரேட் குறைவாகக் கொண்டிருக்கும். அதேநேரத்தில் வெள்ளை அரிசி கார்போஹைடிரேட் அதிகம் கொண்டது. 
சிவப்பு அரிசியின் நன்மைகள்!

சாதாரண அரிசியை வேகவைத்து சாப்பிடுவதைவிட சிவப்பு அரிசி சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். 

♦சிவப்பு அரிசி புரதச்சத்து நிறைந்தது. கார்போஹைட்ரேட் குறைவாகக் கொண்டிருக்கும். அதேநேரத்தில் வெள்ளை அரிசி கார்போஹைடிரேட் அதிகம் கொண்டது. 

♦சிவப்பு அரிசியில் வைட்டமின் பி1, பி3 பி6, இரும்புச்சத்து, மெக்னீசியம், துத்தநாகம், மாங்கனீசு என சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. 

♦ ரத்தத்தில் உள்ள கொழுப்புகளின் அளவைக் குறைக்கிறது. 

♦செரிமானக் கோளாறுகளை சரிசெய்யும். சிறுநீரகப் பிரச்னைகளை சரிசெய்கிறது.

♦ உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கும். 

♦ புற்றுநோயைத் தடுக்கிறது, புற்றுநோய் கிருமிகளுக்கு எதிராகப் போராடும். 

♦ குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. 

♦ உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இந்த அரிசியை சாப்பிடலாம். 

♦ உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். 

♦உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது. வெயில் காலத்தில் உடல் வெப்பநிலையை சமன்செய்ய இந்த அரிசியை சாப்பிடலாம். 

♦ பெண்கள், குறிப்பாக தாய்மார்கள் சிவப்பு அரிசி உண்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். இதர உடல் பிரச்னைகளும் சீராகும். 

♦ நீரிழிவு நோயாளிகள், அதிக ரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு சிறந்த உணவு. 

♦ சிவப்பு அரிசியில் கஞ்சி, களி, தோசை, புட்டு, இடியாப்பம் செய்து சாப்பிடலாம். காலை உணவாக சாப்பிட்டால் மிகவும் நல்லது என்கின்றனர் உடல்நல நிபுணர்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com