வெங்காயத்தை சமையலுக்கு மட்டுமல்ல, அழகுக்கும் பயன்படுத்தலாம்! எப்படி?

வெங்காயத்தை உணவில் சேர்த்து வந்தால் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு உதவும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால், வெங்காயம் அழகுக்கும் பயன்படும் என்பது தெரியுமா? 
வெங்காயத்தை சமையலுக்கு மட்டுமல்ல, அழகுக்கும் பயன்படுத்தலாம்! எப்படி?

வெங்காயத்தில் கார்போஹைட்ரேட், புரதம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், நீர்ச்சத்துக்கள் உள்ளன. வெங்காயத்தை உணவில் சேர்த்து வந்தால் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு உதவும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால், வெங்காயம் அழகுக்கும் பயன்படும் என்பது தெரியுமா? 

எப்படி பயன்படுத்துவது?

♦ தலைமுடி உதிர்வுக்கு தீர்வாக வெங்காயச் சாறை பயன்படுத்தலாம். அதாவது வெங்காயச் சாறை தலைமுடியின் வேர்க்கால்களில் நன்றாகப் படும்படி மசாஜ் செய்து 20-30 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும். 

♦ தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் இது சிறந்த தீர்வாக இருக்கும். 

♦ வெங்காயச் சாறுடன் கற்றாழை ஜெல்லை கலந்து அத்துடன் சில துளிகள் தேங்காய் எண்ணெய் விட்டு பின்னர் தலைமுடியின் ஸ்கால்ப்பில் தடவ வேண்டும். 30 நிமிடம் கழித்து ஷாம்பூ கொண்டு அலசலாம்.  இதனால் தலைமுடி பளபளப்பாகும். 

♦ சருமத்தில் பருக்கள் இருந்தால் வெங்காயச் சாறை தடவி சில நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். 

♦ கரும்புள்ளிகள் இருந்தால் வெங்காயச் சாறுடன் தேன் கலந்து தடவலாம். 

♦நகம் சிலருக்கு எளிதாக ஒடிந்துவிடும். எனவே, நகம் வலிமையாக இருக்க தண்ணீரில் வெங்காயச் சாறை விட்டு அதில் நகங்களை சிறிது நேரம் நனைக்க வேண்டும். 

♦தயிருடன் சிறிது அவோகேடா பழம்/பழச்சாறு, மேலும் வெங்காயச் சாறு சேர்த்து முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து அலசவும். இது வயதான தோற்றத்தைத் தவிர்த்து சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும். 

♦ வெங்காயச் சாறு, எலுமிச்சை நீரும் சேர்த்தும் சருமத்திற்கு பயன்படுத்தலாம். 

♦ வெங்காயச் சாறை முகத்தில் தடவுவதற்கு முன்னதாக உடலில் சிறு பகுதியில் முதலில் அப்ளை செய்து அழற்சி எதுவும் ஏற்படுகிறதா என்று பார்த்துவிட்டு பின்னர் பயன்படுத்தவும். உங்களுக்கு ஏற்கெனவே சரும அழற்சி இருக்கும்பட்சத்தில் சருமத்தில் நேரடியாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com