முகத்தில் இறந்த செல்களை எப்படி நீக்கலாம்..!

முகத்தில் படியும் இறந்த செல்களை எவ்வாரெல்லாம் நீக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்...
முகத்தில் இறந்த செல்களை எப்படி நீக்கலாம்..!

பொதுவாக பெண்கள் சரும பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள். சரி, முகத்தில் படியும் இறந்த செல்களை எவ்வாரெல்லாம் நீக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ளலாம் வாங்க...

முக்கியமாக வேலைக்குச் செல்லும் பெண்கள், முகத்தி்ற்கு சற்று கூடுதல் கவனம் செலுத்தியேயாக வேண்டும். வெயில், தூசு என்று அதிகப்படியான அழுக்கு படிய வாய்ப்புள்ளது.

சருமத்தில் இறந்த செல்கள் அப்படியே தங்கிவிடுவதால், சருமம் பொலிவிழந்து எப்போதும் ஒருவித டல்னஸ் காணப்படும். அதற்கு நாம் முக்கியத்துவம் கொடுத்தே ஆக வேண்டும். இல்லையெனில் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.

என்ன பிரச்னையெல்லாம் வரும்? முகப்பரு, டாட் ஸ்பாட்ஸ், கருவளையம், பொலிவிழத்தல், ஒரு சிலருக்கு அரிப்பு, வறட்சி ஏற்படவும் வாய்ப்புள்ளது. சரி இதற்கெல்லாம் என்ன செய்யலாம்?

பெண்கள் தங்களுக்கென சற்று நேரம் ஒதுக்கி கீழே கூறியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.

முகத்தில் இறந்த செல்களை எப்படி நீக்கலாம்..!
மாத்திரை இல்லாமல் தலைவலி குணமாக வேண்டுமா?

* தினமும் ஆலிவ் எண்ணெய்யை முகத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் கொடுக்கலாம். முகத்திற்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

* பசும்பால், பாசிப்பயறு மாவு, குப்பைமேனி இலைச்சாறு, கஸ்தூரி மஞ்சளுடன் கலந்து முகத்தில் தடவலாம். முகச்சுருக்கம் நீங்கும்.

* முகத்தில் வறட்சி சரியாக தேன், பாலுடன் குங்குமப்பூ சிறிது கலந்து முகத்தில் தடவலாம்.

* பாலில் குங்குமப்பூ கலந்து தடவலாம். தக்காளி சாற்றைத் தொடர்ந்து தடவி வரலாம் இதனால் எண்ணெய் வழிவது குறையும்.

முகத்தில் இறந்த செல்களை எப்படி நீக்கலாம்..!
ஒரே ஒரு பழத்தில் இவ்வளவு மகத்துவம் இருக்கா?

* பாதாம் பருப்பு அரைத்து முகத்தில் தடவி வரக் குழந்தையி்ன் சருமம் போல் மிருதுவாகும்.

* பப்பாளிப் பழத்துடன் பால் சேர்த்து பூசிவர இறந்த செல்கள் அகன்றுவிடும்.

* பாசிப்பயறு மாவு, வெள்ளரிக்காய் சாறு கலந்து பூசி வர வறட்சி, கொப்புளங்கள் சரியாகும்.

* ஆரஞ்சு பழத்தோல் அரைத்து தேன், தயிர் கலந்து தடவி வருவதும் முகம் பளபளப்பாகும்.

* கடலை மாவுடன் தேன், பால் சேர்த்து தடவிவர சருமம் பொலிவாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

* இதற்கெல்லாம் நேரமில்லை என்பவர்கள் பன்னீர் அல்லது கற்றாழையை 10 நிமிடங்கள் தடவி கழித்து முகத்தை கழுவலாம். சருமத்தில் அழுக்குகள் நீங்கம்.

பெண்கள் இதையெல்லாம் பின்பற்றி வர, இறந்த செல்கள் நீங்கி சருமம் பளபளப்பாக இருக்கும். நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்களேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com