மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் சுறுசுறுப்பாக உணர்கிறார்கள்: ஆய்வு

பெண்கள் மாதவிடாய் நாள்களில் சுறுசுறுப்பாக இருப்பதாக ஆய்வு கூறுகிறது
மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் சுறுசுறுப்பாக உணர்கிறார்கள்: ஆய்வு
Center-Center-Bhubaneswar
Published on
Updated on
1 min read

மாதவிடாய் சுழற்சியின்போது பெண்களின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்பில், ஒரு மாதம் முழுக்க மாதவிடாய் சுழற்சியை மையப்படுத்தி மூளையும் உடலும் எவ்வாறு செயல்படுகிறது என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொதுவாக தங்களது பணித்திறன் மற்றும் மனநிலை வெகு சுமாராகவே இருக்கும் என்று பெண்களே கருதும் மாதவிடாய் நாள்களில்தான் அவர்கள் உண்மையிலேயே சுறுசுறுப்பாகவும் மிகக் குறைவான தவறுகளுடன் பணியாற்றுவதாகவும் புதிய ஆய்வு கூறுகிறது.

யுசிஎல், விளையாட்டு, உடற்பயிற்சி, சுகாதாரத்துக்கான கல்வி மையம் இணைந்து நடத்திய ஆய்வில், மருத்துவ இதழில் இது பற்றி வெளியாகியிருக்கும் ஆய்வுக் கட்டுரையில், மாதவிடாய் சுழற்சி முழுவதும் விளையாட்டு தொடர்பான திறன் முதலில் ஆய்வு செய்யப்பட்டது. இது, ஃபிபா ஆராய்ச்சி உதவித்தொகை மூலம் நிதியளிக்கப்பட்ட பெரிய ஆய்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இந்த ஆய்வு, மாதவிடாய் காலங்களில், பெண்கள் நேர்த்தியாக செயல்படுவதும், காயம் படுவது, ஒட்டுமொத்த உடல்நலன் பாதிக்கப்படுவது குறைவதாகவும் குறிப்பிடப்பட்டுளள்து.

முந்தைய ஆய்வில், மாதவிடாய் அல்லாத நாள்களில் அதாவது முட்டை வெடிப்பு மற்றும் மாதவிடாய் தொடங்குவதற்கு இடைப்பட்ட காலத்தில், விளையாட்டு நடவடிக்கைகளின்போது பெண்களுக்கு காயம் ஏற்படுவதற்கான அபாயங்கள் அதிகமாக இருக்கிறதாம், காரணம், அப்போது ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தினால் என்கிறார்கள்.

இதில் பங்கேற்ற பங்கேற்பாளர்கள் தங்களது மனநிலையில் ஏற்படும் மாற்றம் உள்ளிட்ட அனைத்துத் தகவலையும் தொடர்ந்து பதிவு செய்து வைத்தனர். இதற்காக மாதவிடாய் சுழற்சியை ஆய்வு செய்யும் மொபைல் செயலிகளும் பயன்படுத்தப்பட்டன.

அவர்களது மனநிலையை துல்லியமாக ஆய்வு செய்யும் வகையில், ஒரு சோதனை செய்யப்பட்டது. அதில், சிரித்த முகம் கொண்ட ஸ்மைலி வந்தவுடன் ஸ்பேஸ் பாரை அழுத்த வேண்டும். அதன் மூலம், அவர்களது கவனம், திறமை, எவ்வளவு சீக்கிரம் வினையாற்றுகிறார்கள், துல்லியம் போன்றவை கணக்கிடப்பட்டது.

இரண்டாவது, மிரர் இமேஜ் முறையில் 3டி ரோடேஷனில் கொடுக்கப்பட்டது. மூன்றாவது, இரண்டு பால்கள் ஒன்றை ஒன்று இடித்துக்கொள்ளும்போது கிளிக் செய்ய வேண்டும் என்பது போன்றவை அமைக்கப்பட்டது.

ஆனால் இந்த சோதனைகளின்போது, பெண்கள் எப்போதுமே மாதவிடாய் காலங்களில் சோர்வாக இருப்பது உள்ளிட்ட எண்ணங்களை எல்லாம் தாண்டி, அவர்கள் மிகச் சிறப்பான திறனை வெளிப்படுத்தியதாகவும், மற்ற நாள்களை விட குறைவான தவறுகளே இந்தக் காலக்கட்டத்தில் நிகழ்ந்ததாகவும் ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.

ஆனால், அதே வேளையில், முட்டை வெடிப்பு மற்றும் மாதவிடாய் தொடங்குவதற்கு முந்தைய நாள்களில்தான் சற்று மெத்தனமாக இருப்பதைக் காட்டியது. ஆனாலும் அதிக தவறுகள் நிகழ்ந்ததாகவும் பதிவாகவில்லை.

இந்த ஆய்வின் மூலம், பயிற்சியாளர்களுக்கும், விளையாட்டு வீராங்கனைகளுக்கும் திறமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்த எளிதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாதம் முழுக்க மாதவிடாய் காலத்தை முன்னிட்டு மூளையும் உடலும் அடையும் மாற்றங்கள் குறித்தும் விரிவான ஆய்வுக்கு வித்திடப்பட்டுள்ளது என்று கூறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com