வாழைப்பழத்தில் இத்தனை மகத்துவமா?

சாதாரண வாழைப்பழம் என்கிறோம்.. ஆனால், ஒரு வாழைப்பழத்தில் இத்தனை மகத்துவ குணங்கள் இருக்கிறதா?
வாழைப்பழத்தில் இத்தனை மகத்துவமா?
Published on
Updated on
1 min read

அந்த இன்னொரு வாழைப்பழம் எங்கே என்று கௌண்டமணி கேட்க, ஒரு சாதாரண வாழைப்பழத்துக்கா இத்தனை கூத்து என்று மற்றவர்கள் கேட்பார்கள். ஆனால் உண்மையில் ஒரு வாழைப்பழம் என்பது சாதாரண பழமே அல்ல. அது மலிவாகக் கிடைக்க ஒரே ஒரு காரணம்தான். அதன் ஆயுள்காலம்தான்.

தவிர, அதிலிருக்கும் சத்துகளும் பயன்களும் அளப்பரியது.

பூவம் பழம், ரஸ்தாலி, செவ்வாழை என எண்ணற்ற வகைகளைக் கொண்டு, ஒவ்வொரு வகைக்கும் ஒரு சுவையைக் கொண்டிருக்கும் வாழைப்பழத்தின் சுவை அலாதியானது. அது மட்டுமல்ல, மா, பலா போன்ற சில பழங்கள் சில வேளைகளில் சுவைக்காது. சப்பென்றுகூட இருக்கும். ஆனால், ஒரு வாழைப்பழமும் சுவையில் நம்மை எப்போதுமே ஏமாற்றாது.

நமது உடலுக்கு ஒட்டுமொத்தமாக நல்ல பலனையும் உடல் நலனுக்கு நல்லதாகவும் இருக்கும் வாழைப்பழத்தைப் பற்றி கூறிக்கொண்டே இருக்கலாம்.

வாழைப்பழத்தில் இத்தனை மகத்துவமா?
உ.பி.யில் பாஜகவின் தேர்தல் வியூகம் என்ன?

அதிக பொட்டாசிய சத்து நிறைந்தது. இது இதயத் துடிப்புக்கு மிகச் சிறந்தது. ரத்த அழுத்தத்தை சீராக்க உதவும். தசைகளின் நலனுக்கும் உதவும்.

அதிகப்படியான நார்ச்சத்து நிறைந்தது என்பதால், சீரணத்தை சீராக்கும்.

இயற்கையான இனிப்பு சுவை கொண்டிருப்பதாலும் கார்போஹைட்ரேட் நிறைந்திருப்பதாலும் இதன் மகத்துவம் சொல்லில் முடியாது. விட்டமின்கள் அதிகம் கொண்டதால், உடலின் செயல்பாட்டுக்கு உந்துசக்தியாகவும் இருக்கும்.

உடற்பயிற்சி செய்யும் முன் சாப்பிட ஏற்ற கனியாகும்.

டிரைப்டோபான் அதிகம் இருப்பதால், நமது மனநிலையை சீராக வைக்கவும் உதவுகிறது. மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தி மகிழ்ச்சியாக வைக்கவும் உதவும்.

வாழைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு உடலில் கால்சியத்தை எடுத்துக்கொள்ளும் திறன் அதிகரிக்கும். இதனால், எலும்புகள் வலுவடையும்.

விட்டமின் ஏ அதிகம் நிறைந்த, பீடா-கரோடீன் கொண்ட பழம் என்பதால், கண் பார்வைக்கும், வயதான காலத்தில் ஏற்படும் பார்வைக் குறைபாடுகளுக்கும் மருந்தாகும்.

ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், விட்டமின் சி நிறைந்திருப்பதா, சருமப் பொலிவுக்கும் உதவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com