உ.பி.யில் பாஜகவின் தேர்தல் வியூகம் என்ன?

உ.பி.யில் பாஜகவின் தேர்தல் வியூகம் என்ன சொல்கிறது. எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?
உ.பி.யில் பாஜகவின் தேர்தல் வியூகம் என்ன?

உத்தரப்பிதேசத்தில் மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில், 74 தொகுதிகளில் போட்டியிட பாஜக முடிவெடுத்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மற்ற 6 தொகுதிகளில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அப்னா தல், ஆர்எல்டி கட்சிகள் தலா 2 தொகுதிகளையும், எஸ்பிஎஸ்பி, நிஷத் கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிலாம் என்று கூறப்படுகிறது.

நாட்டில் அரசியல் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு அதிக எண்ணிக்கையில் எம்.பி.க்களை அனுப்பும் உத்தரப் பிரதேச மாநிலத்தில், எந்த ஒரு தேசியக் கட்சியினரும் மிகப்பெரிய அளவில் விவாதமோ ஆலோசனையோ நடத்தாமல் தொகுதிப் பங்கீட்டை முடிக்க முடியாது என்பது நிதர்சனம்தானே.

மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற மோடியின் லட்சியத்தை அடைய வேண்டும் என்ற எண்ணத்தோடு, புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜகவின் மத்திய தேர்தல் குழு பேச்சுவார்த்தை நடத்தியது.

மாநிலத்தில், பாஜகவின் பரப்பை அதிகரிப்பதோடு, கூட்டணி கட்சிகளுக்கும் சில தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பது சவாலாகவே இருந்திருக்கும்.

இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகுதான், பாஜகவின் மத்திய தேர்தல் குழுவினர், ஒரு வழியாக, உத்தரப்பிரதேசத்தில் 74 தொகுதிகளில் போட்டியிடுவது என்றும், ஆறு தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

6 தொகுதிகளில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அப்னா தளம், ஆர்எல்டி கட்சிகள் தலா 2 தொகுதிகளை ஒதுக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், அப்னா தளம் ஐந்து தொகுதிகளைக் கேட்டுள்ளது. எனவே, இரண்டு தொகுதிகளைக் கொடுத்து சமரசம் செய்ய வேண்டியதிருக்கும். எஸ்பிஎஸ்பி, நிஷத் கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிலாம் என்று கூறப்படுகிறது.

2019ஆம் ஆண்டு மோடி அரசில் அமைச்சராக இருந்த அனுப்ரியா படேலுக்கு இரண்டு தொகுதிகள்தான் ஒதுக்கப்பட்டன. 2014ஆம் ஆண்டும் இதேத நிலைதான்.

இந்த தொகுதிகளுடன் மேலும் ஒரு தொகுதியாவது கிடைக்க வேண்டும் என்று அனுப்ரியா நினைக்கிறார். ஆனால், பாஜக கைவிரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா கூட்டணியிலிருந்து மாறி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வந்த ஆர்எல்டி தலைவர் ஜெயந்த் சௌத்ரியும் இரண்டு தொகுதிகளைக் கேட்கிறார். மேலும் ஒரு அமைச்சர் பதவியும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் அவர்களது கோரிக்கையாக உள்ளது.

இதனால், கடந்த 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் போட்டியிட்ட 78 தொகுதிகளைக் காட்டிலும் குறைவாகவே இந்த முறை போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு பாஜக 64 தொகுதிகளை வென்றது. எதிர்க்கட்சிகள் 15 தொகுதிகளை கைப்பற்றியது. பகுஜன் சமாஜ் 10 தொகுதிகளிலும், சமாஜ்வாதி கட்சி 5 தொகுதிகளிலும் வென்றன.

2014ஆம் ஆண்டும் 73 தொகுதிகளில் பாஜக வென்று சாதனை படைத்திருந்தது. முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதி வெறும் 5 தொகுதிகளில்தான் வென்றிருந்தது. காங்கிரஸ் கட்சி ரே பரேலி, அமேதி தொகுதிகளில்தான் வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com