வெயில் வந்துவிட்டது.. தலைமுடியை எப்படி பராமரிக்கலாம்?

நேரடி சூரிய ஒளியில் ஏராளமான நன்மைகள் உள்ளன என்றாலும், சூரியனின் புற ஊதாக்கதிர்களால் சருமம், தலைமுடியை நிச்சயம் பாதிக்கும்.
வெயில் வந்துவிட்டது.. தலைமுடியை எப்படி பராமரிக்கலாம்?

கோடைக்காலம் வந்துவிட்டாலே அதிகப்படியான வெயில் காரணமாக சருமம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் தலைமுடியும் பாதிக்கப்படும்.

மார்ச் முதல் ஜூலை வரை கொளுத்தி எடுக்கும் சூரியன் நம்மை வாட்டிவதைத்து விடும். வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க வீட்டிலேயே பணிபுரிவதும், வெளியில் செல்லாமல் இருப்பதும் நிச்சயம் எல்லோருக்கும் சாத்தியமில்லை.

நேரடி சூரிய ஒளியில் ஏராளமான நன்மைகள் உள்ளன என்றாலும், சூரியனின் புற ஊதாக்கதிர்கள் சருமம், தலைமுடியை நிச்சயம் பாதிக்கும்.

என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?

கோடைக்காலத்தில் அதிக வியர்வை, இதனால் அரிப்பு, பொடுகு, பேன் தொல்லை போன்றவை ஏற்படலாம். ஈரப்பதத்தை இழந்து தோல் வறட்சி ஏற்பட்டு, தலைமுடி பொலிவு இழக்கவும், கடினமாகவும் வாய்ப்புள்ளது.

தலைமுடியைப் பராமரிக்க செய்ய வேண்டியது..

• கோடைக்காலத்தில் முடியின் நுனியில் ஏற்படும் வெடிப்புகளைத் தடுக்க முடியை முதலில் ட்ரிம் செய்யலாம்.

• வாரத்திற்கு இரண்டு முறையாவது தலை முடியை சுத்தமான நீரால் கழுவலாம்.

வெயில் வந்துவிட்டது.. தலைமுடியை எப்படி பராமரிக்கலாம்?
எச்சரிக்கை! தூக்கத்தில் பிரச்னையா.. அது மூளை, நினைவாற்றலை பாதிக்கலாம்!!

• அதிகப்படியான ரசாயனங்கள் கொண்ட ஷாம்புக்களை பயன்படுத்துவதைத் தடுக்கலாம். இது கூந்தலை மேலும் வலுவிழக்கச் செய்து உடைய செய்யும்.

• வறட்சியைத் தடுக்க பாதுகாப்பு கவசமாய் விளங்குவது எண்ணெய். குளிப்பதற்கு முன்பு குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது தேய்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்ல எண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தலையில் ஊரவைத்துக் குளிக்கலாம்.

• கெமிக்கல் கலந்த கன்டிஷனர்கள் பயன்படுத்துவதைத் தவிர்த்து, இயற்கையாகக் கிடைக்கும் கற்றாழை, வெந்தயம் இவற்றைப் பயன்படுத்தலாம்.

• வெளியில் செல்லும்போது புற ஊதா கதிர்களில் தலையில் நேரடியாகப் படாதவகையில் தலைக்கு ஸ்கார்ப் அல்லது குடை பிடித்துச் செல்லலாம்.

• முடிக்கு ஹேர் ட்ரையர்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com