தினமும் 20 நிமிடம் நடந்தால் இதயத்திற்கு நல்லது! - ஆய்வில் தகவல்

தினமும் 20 முதல் 27 நிமிட உடற்பயிற்சி ரத்த அழுத்தத்தை கணிசமாகக் குறைக்கும் என்று கூறுகிறது சமீபத்திய ஆய்வு.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

பரபரப்பான வாழ்க்கை முறைச் சூழலால் உடல் ஆரோக்கியத்தில் பலரும் பல மாற்றங்களை எதிர்கொள்கின்றனர். சிலருக்கு இளம் வயதிலேயே உடல் ரீதியாக பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.

எனவேதான் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பலருக்கும் நேரமின்மை என்பது மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. ஆனால் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் அதற்காக நேரத்தை ஒதுக்குவது அவசியம்.

அந்தவகையில் 5 நிமிட கூடுதல் உடற்பயிற்சிகூட ரத்த அழுத்தத்தை கணிசமாகக் குறைக்கலாம் என்கிறது சமீபத்தில் ஓர் ஆய்வு.

'சர்குலேஷன்' இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வினை சிட்னி பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.

5 நாடுகளில் உள்ள 14,000 தன்னார்வலர்களின் தரவுகளை ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அவர்கள் தினசரி மேற்கொள்ளும் உடற்பயிற்சிகளான நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

படிக்கட்டு ஏறுதல், வேகமான நடைப்பயிற்சி, ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற எளிய உடற்பயிற்சிகளே இதயத்தை பாதுகாக்கும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. தினமும் 20 முதல் 27 நிமிடங்கள் வரை உடல் இயக்கத்தில் இருந்தாலே போதும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இந்த லேசான உடற்பயிற்சி, இதய நோய் அபாயத்தை 28 சதவீதம் வரை குறைக்கும் என்று மதிப்பிடுகின்றனர்.

'உயர் ரத்த அழுத்தம் என்பது தற்போது உலகளவில் உள்ள மிகப்பெரிய சுகாதார பிரச்னைகளில் ஒன்றாகும். இது இதயத்தையும் பாதிக்கிறது. எனவே உடற்பயிற்சி செய்வது இந்த பாதிப்புகளின் அபாயத்தைக் குறைக்க உதவும் என்கிறார் ஆய்வு மேற்கொண்ட கூட்டமைப்பின் இயக்குநர் பேராசிரியர் இம்மானுவேல்.

டாக்டர் ஜோ ப்ளாட்ஜெட் கூறுகையில், 'உடற்பயிற்சி ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்பதைவிட நடப்பது போன்ற லேசான உடற்பயிற்சியே ரத்த அழுத்தத்தைக் குறைக்கும், உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் என்பதேயே எங்களுடைய இந்த ஆய்வு கூறுகிறது. உங்களுடைய உடல் எப்படி இருந்தாலும் இது பொருந்தும்.

பேருந்துக்காக ஓடுவது, சிறிது நேரம் சைக்கிள் ஓட்டுவது ஆகியவை கூட நாங்கள் கூறும் லேசான உடற்பயிற்சியில் அடங்கும். அதிக நேரம் உட்கார்ந்தே இருந்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நிற்பது, நடப்பது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கவில்லை. 5 நிமிட கூடுதல் உடற்பயிற்சி கூட உங்கள் ரத்த அழுத்தத்தைக் கணிசமாகக் குறைக்கலாம்' என்று கூறுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com