இளமையாக இருக்க வேண்டுமா? வீட்டிலுள்ள இந்த 8 பொருள்கள் போதும்!

இளமையுடன் இருக்க அழகுக் குறிப்புகள்...
beauty tips
ENS
Published on
Updated on
1 min read

சரும அழகுக்காக மெனக்கெடுபவர்கள் இன்று அதிகம். பெரும்பாலான பெண்களும் சரி, ஆண்களும் சரி அழகுக்காக குறைந்தது மாதத்திற்கு இருமுறையாவது அழகு நிலையங்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள், விழாக்கள் என்றால் அழகு நிலையங்களை நாடியே இருக்கின்றனர்.

அடுத்து கடைகளில் விற்கக்கூடிய அழகு சாதனப் பொருள்களை அதிகம் வாங்கிப் பயன்படுத்துகின்றனர். இதில் அதிகமாக ரசாயனங்கள்தான் சேர்க்கப்படுகின்றன என்பதால் தற்காலிக அழகைக் கொடுக்கும் இந்த பொருள்கள் நாளடைவில் முதுமை தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.

ஆனால் வீட்டிலேயே உள்ள பொருள்களைக் கொண்டு இயற்கையான முறையில் அழகை மேம்படுத்தலாம்.

உங்கள் சமையலறையிலேயே உங்கள் அழகை மெருகூட்டுவதற்கான பொருள்கள் இருக்கின்றன.

காபி

காபியில் அதிக ஆன்டி-ஆக்சிடன்ட் இருப்பதால் சருமத்தில் அதிகமாக கொலோஜன் புரதத்தை உற்பத்தி செய்கிறது. இதனால் வயதானாலும் இளமை தோற்றத்தைக் கொடுக்கும். காபியுடன் சிறிதளவு சர்க்கரையை சேர்த்து ஸ்க்ரப் செய்யலாம்.

கடலை மாவு

அழுக்குகள், நச்சுகள் என சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்துகிறது. குறிப்பாக எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கு இது சிறந்த பொருள்.

ஆலிவ் எண்ணெய்

வைட்டமின் இ, ஆன்டி-ஆக்சிடன்ட் அதிகம் கொண்டது. சருமத்தில் உள்ள சேதத்தை சரிசெய்கிறது, சருமத்துளைகளை பாதிக்காத வண்ணம் ஈரப்பதத்தை வழங்குகிறது. முகத்தில் ஆலிவ் எண்ணெய் போடுவதால் சருமம் பொலிவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

பப்பாளி

முகத்திற்கு இளமையையும் பளபளப்பையும் தருகிறது. சருமத்தை மென்மையாக்கி பொலிவடையச் செய்யும் 'பப்பேன்' என்ற நொதியைக் கொண்டுள்ளது. சுருக்கங்களையும் சரிசெய்கிறது.

நெய்

வெண்ணெய் அல்லது நெய் எல்லோர் வீட்டிலும் இருக்கக்கூடிய ஒரு பொருள். இதில் கொழுப்பு அமிலங்கள், ஆன்டி-ஆக்சிடன்ட் அதிகம் உள்ளன. இதுவும் சருமத்தில் சுருக்கங்களை சரிசெய்து பொலிவைத் தருகிறது. இளமையுடன் தோற்றமளிக்கச் செய்யும்.

தயிர்

தயிரில் ஜிங்க், லாக்டிக் அமிலம் போன்றவை நிறைந்திருப்பதால் இது நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டது. சருமத்தை மென்மையாக்குவதுடன் முகப்பருக்கள், வடுக்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது.

தேங்காய் எண்ணெய்

சரும அழகுக்கு உதவும் ஒரு முக்கியமான பொருள். நல்ல மாய்சரைசராக பயன்படுத்தலாம். சருமத்திற்கு நீரேற்றம் அளிக்கிறது. மேலும் சருமத்திற்கு ஊட்டமளித்து மிருதுவாக்குகிறது.

தேன்

சருமம் மென்மையாவதற்கு சிறந்த பொருள் தேன். சருமக் கோளாறுகளை சரிசெய்யும் திறன் கொண்டது.

இவற்றில் உங்கள் சருமத்திற்கு ஒத்துக்கொள்ளக்கூடிய பொருள்களை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com