சருமத்தில் தேவையற்ற முடி உள்ளதா? இயற்கையான தீர்வு இதோ!

பெண்களுக்கான சருமப் பராமரிப்பு பற்றி...
Do you have unwanted hair on your skin? Here is a natural solution
கோப்புப்படம்ANI
Updated on
1 min read

சமீபமாக பெண்கள் அழகுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் சிலருக்கு முகத்தில், கை, கால்களில் தேவையற்ற முடிகள் வளர்ந்திருக்கும். இது பெரும்பாலானோருக்கு அழகைக் கெடுக்கும் விதத்தில் இருக்கும்.

இது பெண்களுக்கு ஒரு சில ஹார்மோன் மாற்றங்களாலும் ஏற்படும் என்று கூறப்படுகிறது. வழக்கத்திற்கு அதிகமான முடி வளர்ச்சி இருந்தால் கண்டிப்பாக ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

மாறாக சாதாரணமாக முகத்தில் குறிப்பாக உதட்டின் மேல் பகுதியில், தாடையின் கீழ் பகுதியில் நெற்றியில்கூட சிலருக்கு உரோமங்கள் இருக்கும். அதேபோல கை, கால்களிலும் அதிகமாக முடி வளர்ந்திருக்கும். பலரும் இதற்கு க்ரீம்களைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்.

இதற்கு இயற்கையான வழிகள் இருக்கின்றன.

கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள், அரிசி மாவு தலா ஒரு தேக்கரண்டி எடுத்து அத்துடன் தேவையான அளவு பால் சேர்த்து கலந்து முகத்தில் முடி உள்ள இடங்களில் தடவி ஒரு 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிட வேண்டும்.

சிலருக்கு பால் ஒவ்வாமை இருக்கும். அவர்கள் பாலுக்கு பதிலாக தயிர் சேர்த்த கலவையை முயற்சிக்கலாம்.

வாரத்திற்கு குறைந்தது 3 நாள்கள் இவ்வாறு செய்யலாம். தொடர்ந்து செய்துவர படிப்படியாக முடி உதிரும்.

[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]

Summary

Do you have unwanted hair on your skin? Here's a natural solution!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com