

தமிழ்,தெலுங்கு என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவுள்ள நடிகை தமன்னா, தனது அழகின் ரகசியம் குறித்தும் தன்னுடைய சருமப் பராமரிப்பு குறித்தும் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.
நேர்காணலில் சருமப் பராமரிப்பு குறித்து தமன்னாவிடம் கேட்டபோது, அவர் முகப்பருக்கள் வந்தால் தன்னுடைய வாய் உமிழ்நீரைக் கொண்டு சரிசெய்வதாகக் கூறியுள்ளார். இவருடைய பதில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் கூறுகையில், "ஒருநாள் என்னுடைய நாயை வெளியில் கூட்டிச் செல்லும் ஒருவர் என்னைச் சந்தித்தார். என்னுடைய முகத்தில் முகப்பருக்கள் இருந்தன. உங்களுக்கும் முகப்பரு வருமா? என்று கேட்டார். 'நாங்களும் மற்ற பெண்களைப் போலத்தான், நிறையவே வரும்' என்று கூறினேன்.
நான் முகப்பருக்களுக்கு என்னுடைய எச்சிலை, பருக்களின் மீது தடவி சரிசெய்து விடுகிறேன். காலையில் வெறும் வாயில் உள்ள எச்சிலை பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அறிவியல்ரீதியாக காலையில் நம் வாயில் உள்ள எச்சிலில் பாக்டீரியா எதிர்ப்புப் பொருள்கள் அதிகம் இருக்கும். அது முகப்பருக்களுக்கு எதிராக வேலை செய்யும். இது எனக்கு நன்றாகவே வேலை செய்கிறது" என்று வெளிப்படையாகக் கூறினார்.
மேலும் தன்னுடைய அழகுக்கு காரணமாக டயட்டைக் குறிப்பிடுகிறார்.
"சருமத்தைப் பாதிக்கும் எந்த உணவையும் நான் எடுத்துக்கொள்வதில்லை. பலரும் தங்களுக்கு இருக்கும் உணவு ஒவ்வாமைகளைப் பற்றித் தெரிந்துகொள்வதே இல்லை. ஏன் பல ஆண்டுகளாக எனக்கு குளூட்டன்)கோதுமை, பார்லி போன்ற உணவுகளில் உள்ள பொருள்) மற்றும் பால் பொருள்களால் ஒவ்வாமை என்பதே தெரியாமல் இருந்தேன். அதைத் தவிர்த்தபிறகு என் சரும அழகில் முன்னேற்றம் கண்டேன்.
சரும அழகு என்பது க்ரீம்களால் வருவது அல்ல, உங்கள் உடலுக்கு என்ன தேவை, அது எப்படிச் செயல்படுகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்வதில்தான் சருமம் அழகு பெறுகிறது. முதலில், உங்கள் உடலைப் பற்றி நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் உடலின் பிரதிபலிப்புதான் சருமம். உங்கள் உடல் சுத்தமாக இருந்தால் குடல் ஆரோக்கியமாக இருந்தால் உங்கள் முகமும் சருமமும் அழகாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.