சிறந்த உணவு நகரம்: 5-வது இடம்பிடித்த மும்பை! சென்னை..?

உலகில் 100 சிறந்த உணவு நகரங்களின் பட்டியல் பற்றி...
Six indian cities Rank Amongst TasteAtlas 100 Best Food Cities in the World
கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

உலகில் சிறந்த உணவுகள், சிறந்த உணவு நகரங்கள் ஆகியவற்றின் பட்டியலை பயண வழிகாட்டி நிறுவனமான டேஸ்ட்அட்லஸ் வெளியிட்டுள்ளது.

அந்தவகையில் உலகில் 100 சிறந்த உணவு நகரங்களின் பட்டியலை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதில் முதல் 4 இடங்களை இத்தாலி நாட்டின் நகரங்கள் உள்ளன. அவற்றில் நேபிள்ஸ், 4.8 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இங்கு மிக உயர்ந்த ரேட்டிங் உணவுப்பொருள் என்பது பீட்சா. இந்தியாவில் பீட்சா இருந்தாலும் அது தோன்றியது இத்தாலியில்தான். 18 ஆம் நூற்றாண்டில் நேபிள்ஸில் மலிவான, ஊட்டச்சத்து மிக்க உணவாக பீட்சா பிரபலமடைந்தது. விவசாயிகளால் இதனை உணவாக அதிகம் எடுத்துக்கொண்டனர்.

5 ஆவது இடத்தை இந்தியாவின் மும்பை நகரம் பிடித்துள்ளது. மும்பையைப் பொருத்தவரை அதிக மதிப்பீடு பெற்ற உணவுகள் வடை பாவ், பாவ் பாஜி, ரக்தா பஜ்ஜி, பாம்பே பிரியாணி.

முதல் 50 இடங்களுக்குள் அமிர்தசரஸ் 43-வது இடத்தையும் , புது தில்லி 45- வது இடத்தையும் மற்றும் ஹைதராபாத் 50-வது இடத்தையும் பெற்றுள்ளது.

அமிர்தசரஸில் குல்ச்சா அதிக ரேட்டிங் பெற்றுள்ளது. தில்லியில் சில பிரபலமான உணவுகள் சோல் பதுரே, நிஹாரி, பட்டர் சிக்கன்.

ஹைதராபாத்தில் பிரியாணி, கெபாப், மட்டன் ஹலீம். முகலாயா, துருக்கி, அரேபிய முறை உணவுகளின் கலவையே ஹைதராபாத் உணவு வகைகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து கொல்கத்தா 71 ஆவது இடத்தில் உள்ள நிலையில், சென்னைக்கு 75 ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் சாலையோர உணவுகள், ரசகுல்லா, சந்தேஷ் ஆகியவை பிரபலமான உணவுகள் என்று குறிப்பிட்டுள்ளது இந்நிறுவனம்.

சென்னையில் தோசை, இட்லி, செட்டிநாடு கறி ஆகியவற்றுக்கு ரேட்டிங் அதிகம் கிடைத்துள்ளன.

எங்களுடைய இணையதள தரவுகளில் உள்ள 17,073 நகரங்களில் 15,478 உணவுகளுக்கான 477,287 உணவு ரேட்டிங் அடிப்படையில் இந்த 100 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றும் அங்குள்ள உள்ளூர் மற்றும் தேசிய உணவுகளுக்கான மதிப்பீடுகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவிக்கிறது.

இதேபோன்று இந்தியாவில் பல நகரங்களில் பிரபலமாக அதிக மக்களால் விருப்பப்படும் உணவுகள் பல இருக்கின்றன.

Summary

Six indian cities Rank Amongst TasteAtlas 100 Best Food Cities in the World

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com