
குளிர்காலத்தில் வறண்டு போகும் சருமத்தைப் பாதுகாக்க பலரும் மெனக்கெடுவார்கள். வெயில் காலங்களில்கூட சருமத்தைப் பராமரித்துவிடலாம். ஆனால், பெண்கள் பலருக்கும் இந்த குளிர்காலம் என்றாலே ஒவ்வாமைதான்.
மழைக் காலத்தில் சருமம் பலரும் வறண்டுவிடும். முகப்பருக்கள் போன்ற தொந்தரவுகளும் இருக்கும். இதற்கு அதிக உணர்திறன் கொண்ட சருமம் என்றால் ரசாயனம் அடங்கிய அழகு சாதனப் பொருள்களைத் தவிர்க்க வேண்டும்.
முதலில் முகத்தை வெதுவெதுப்பான நீரில் அவ்வப்போது கழுவ வேண்டும். குளிர்ந்த நீரில், சூடான நீரில் கழுவுவதைத் தவிர்க்கலாம்.
உடனே மாய்ஸரைசரை தடவவும். ரசாயனம் அதிகம் இருக்கும் அழகு சாதனப் பொருள்களைத் தவிர்த்து இயற்கை பொருள்கள் கொண்டு தயாரான தயாரிப்புகளைப் பயன்படுத்தவும்.
இரவு தூங்கும்முன் மேக்கப்பை நீக்கிவிட்டு மாய்ஸரைசர் அல்லது எண்ணெய் தடவி விட்டு படுக்கலாம்.
உணவு முறையை சரியாக செயல்படுத்துங்கள். சத்தான உணவுகளைச் சாப்பிடுங்கள்.
அதிகம் தண்ணீர் குடியுங்கள். நீர் ஆகாரங்களையும் எடுத்துக்கொள்ளலாம்.
சருமத்தை அழுத்தித் துடைக்காமல் மெதுவாக நன்கு சுத்தமான துணியால் துடைக்க வேண்டும்.
சருமத்தை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருங்கள்.
[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.