ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

நகரங்களில் வசிக்கிறீர்களா? நுரையீரலைப் பாதுகாக்க இந்த 10 வழிகளைப் பின்பற்றுங்கள்!

நுரையீரலைப் பாதுகாக்க கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி...

News image

தில்லி - IANS

Updated On :5 பிப்ரவரி 2026, 3:40 pm IST

நகரங்களில் காற்று மாசு அதிகரிப்பால் நுரையீரல் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

ஒட்டுமொத்தமாக உலகளவில் சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் காற்று மாசு அதிகரித்துக் காணப்படுகிறது. பல்வேறு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டாலும் மக்கள்தொகை பெருக்கம், வாகனப் பயன்பாடு ஆகியவற்றால் காற்று மாசுபாடு அதிகமாகவே உள்ளது.

இந்த காற்று மாசு அதிகரிப்பால் நுரையீரல் தொற்றுகள் அதிகம் ஏற்படுகின்றன. இதனைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்? என மருத்துவர்கள் குறிப்பிடுபவை...

1. ஏற்கனவே காற்று மாசு மோசமாக இருக்கும் சூழ்நிலையில் உங்களுடைய நுரையீரலை மேலும் பாதிக்கக்கூடிய புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட வேண்டும்.

2. பிராணயாமா உள்ளிட்ட மூச்சுப் பயிற்சிகளைச் செய்வதன் மூலம் நுரையீரல் நன்றாக செயல்படும்.

3. சத்துள்ள காய்கறிகள், பழங்கள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் ஆரோக்கியமான நுரையீரலுக்கு உதவும்.

4. நல்ல ஆழ்ந்த தூக்கம் அவசியம். ஆழ்ந்த தூக்கம், மாசுபாட்டின் மூலமாக உடலில் ஏற்படும் கோளாறுகளைச் சரி செய்யும்.

5. அதிக போக்குவரத்து நெருக்கடி உள்ள பகுதிகளில் செல்லும்போதும் காற்றின் தரக்குறியீடு மோசமாக உள்ள பகுதிகளில் செல்லும்போதும் முகக்கவசம் அணிவது நல்லது.

6. தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். நீர் ஆகாரங்களையும் அதிகம் எடுத்துக்கொள்வது சுவாசக் கோளாறுகளை சரி செய்யும்.

7. நீங்கள் வசிக்கும் பகுதிகளில் காற்று மாசு எப்படி இருக்கிறது என்பதை தினமும் கண்காணித்து அதற்கேற்ப செயல்படுங்கள். காற்று மாசு அதிகமாக இருக்கும்பட்சத்தில் முடிந்தவரை வெளியில் செல்வதைத் தவிருங்கள். குறிப்பாக குழந்தைகளை அந்த நேரத்தில் வெளியில் விட வேண்டாம்.

8. வீட்டில் பயன்படுத்தும் மின் சாதனப் பொருள்களின் பயன்பாட்டை முடிந்தவரை குறைக்கும்போது வீட்டில் மாசுபாடு குறையும். தேவையில்லாத சமயத்தில் லைட் உள்ளிட்ட மின் சாதனங்களை அணைத்து வைக்கவும்.

9. கார், பைக்குகளை அதிகம் பயன்படுத்தாமல் பொது போக்குவரத்தை முடிந்தவரை பயன்படுத்துங்கள். காற்று மாசைக் குறைக்கும் மின் சைக்கிள்கள், மின் பைக்குகள் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

10. வீட்டில் உள்ள குப்பைகளை எரிப்பது வேண்டாம், பட்டாசுகளை வெடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

Summary

Simple Ways to Protect Yourself from Air Pollution

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.