தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

வெய்யிலால் ஏற்படும் முகப்பருக்களுக்கு ஒரே தீர்வு இதுதான்!

கோடை வெய்யிலால் ஏற்படும் சருமப் பிரச்னைகளுக்கு இயற்கையான தீர்வு பற்றி...

News image

கோப்புப் படம் - ANI

Updated On :24 ஜூன் 2026, 3:28 pm IST

ஜூன் மாதம் தொடங்கியும் பல்வேறு இடங்களில் வெய்யில் அதிகமாகவே இருக்கிறது. இந்த கோடையினால் சருமப் பிரச்னைகளும் அதிகரித்து வருகின்றன. வெப்பநிலை திடீரென அதிகரிக்கும்போது முகப்பரு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

கோடை வெய்யிலால் ஏற்படும் சருமப் பிரச்னைகளைச் சரிசெய்ய பலரும் மருத்துவ உதவிகளை அல்லது அழகு சாதனப் பொருள்களை நாடுகின்றனர். ஆனால், பாரம்பரிய மருத்துவ முறைகளில் இதற்கான தீர்வு உள்ளது. அதுதான் வேப்பிலை அல்லது வேம்பு.

சருமப் பராமரிப்புப் பொருள்களிலும் இந்த வேம்பு பயன்படுத்தப்படுகிறது. சருமம் தொடர்பான அனைத்து வகை பிரச்னைகளுக்கும் தீர்வாக இருக்கிறது. பல்வேறு ஆய்வுகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன.

கோடைக் காலத்தில் ஏற்படும் சருமக் கொப்புளங்கள், முகப்பருக்கள் ஆகியவற்றுக்குக் காரணமான ஸ்டேஃபிளோகாக்கஸ் ஆரியஸ் (Staphylococcus aureus) என்ற பாக்டீரியாக்களை வேப்பிலைச் சாறுகள் முற்றிலும் அழிக்கும் தன்மை கொண்டது.

Story image

ANI

எப்படி பயன்படுத்தலாம்?

வேப்பிலைச் சாறை எடுத்து அதனை நீங்கள் குளிக்கும் தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம் அல்லது வேப்பிலைகளை அப்படியே தண்ணீரில் போட்டும் குளிக்கலாம். இது சருமத்தில் கிருமித் தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

எரிச்சலூட்டும் சருமத்தைக் குளிர்வித்து முகப்பருக்கள் தீவிரமாவதைத் தடுக்கிறது. சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கிறது. சருமத்தில் எண்ணெய் சுரப்பு அதிகம் இருந்தால் அதனைக் கட்டுப்படுத்துகிறது.

வேப்பிலை பொடியுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து முகத்தில் அப்ளை செய்யலாம். சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது சருமத்தின் ஆழத்தில் படிந்திருக்கும் அசுத்தங்களை நீக்கி அதிகப்படியான எண்ணெய்ப் பசையை உறிஞ்சுகிறது.

சருமத்திற்கு சன்ஸ்கிரீன் பயன்படுத்தவில்லை என்றால் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். சரும அழற்சியைத் தவிர்க்க வேப்பிலையை கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.

அதேபோல வாரத்தில் ஒருமுறை வேப்பிலைச் சாறு குடிக்கலாம். இது உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

வீடுகளில் மாலை நேரத்தில் பூச்சிகள் அல்லது கொசுக்கள் அதிகமாக வரும். இதற்கு வேப்ப எண்ணெய் ஒரு தீர்வாக இருக்கும். வேப்ப எண்ணெய்யை, பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து ஒரு துணியில் தடவி பூச்சிகள் வரும் இடத்தில கட்டிவிடலாம்.

[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]

Summary

Neem is using for skin care and health, used to remove acne and pimples removal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.