வெய்யில் காலம் தொடங்கிவிட்டது. கோடையில் பெரும்பாலானோருக்கு சருமம் எண்ணெய்ப் பசையுடனோ அல்லது வறண்டோ காணப்படும்.
இந்த கோடையில் சருமத்தைப் பராமரிக்க கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்கள்...
பெரும்பாலும் வெய்யிலினால் உடலில் நீர்ச்சத்து குறைவதனால் சருமப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். நீர் ஆகாரங்கள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் சருமம் பளபளப்பாக இருக்கும்.
குறைந்தபட்சம் வெளியில் செல்வதற்கு முன்பாக சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும். எஸ்.பி.எப். அளவு(SPF) 20-50க்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். உங்களுடைய சருமத்திற்கு ஏற்றவாறு நிபுணர்களுடன் ஆலோசித்து பயன்படுத்தலாம்.
கோடையில் ரசாயனம் நிறைந்த சோப்புகள், க்ரீம்களைத் தவிர்க்க வேண்டும். ரசாயனம் குறைந்த தயாரிப்புகளைப் பயன்படுத்தலாம்.
தளர்வான பருத்தி ஆடைகள் அணிவதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
இரவு தூங்கச் செல்லும் முன் மேக்அப்பை அகற்ற வேண்டும். முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும். வறட்சியைத் தடுக்க ஏதேனும் மாய்சரைசர் பயன்படுத்தலாம்.
சருமத்திற்கு தயிர், வெள்ளரிக்காய், கற்றாழை ஆகியவற்றைப் பயன்படுத்தினால் சருமத்திற்கு தேவையான நீரேற்றம் கிடைத்து சருமம் பளபளப்புடன் இருக்கும்.
அதேபோல தர்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சு போன்ற வைட்டமின் சி நிறைந்த பழங்களைச் சாப்பிடலாம்.
உங்களுடைய பெட்ஷீட், தலையணை கவர்கள், போர்வைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]
Summary
Skin care routine for summer
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோடைக் கால இசைப் பயிற்சி முகாம்

கோடையில் பொடுகுத் தொல்லை அதிகம் ஏற்படுவது ஏன்?

அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கோடைக் கால சிறப்பு முகாம் தொடக்கம்

சருமம் வறண்டுபோக இதுதான் காரணம்! என்ன செய்யலாம்?
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

