மந்திரப் புன்னகை... 

கூரத்தாழ்வார் தன் குருவான இராமானுஜருக்காகத் தன் கண்களையே இழந்த சீடர். அடடா, இவரைப் பற்றி உடனே சொல்லாமல் போனேனே'' என்றுஹெட்போன் பாட்டி புலம்பியவாறு, திருவரங்கத் திசைநோக்கி ஒரு வணக்கம் சொல்ல
மந்திரப் புன்னகை... 

உன்னோடு போட்டிபோடு! - 20

"போதாயன விருத்தி எனும் அரிய நூற்பிரதியைக் காஷ்மீர நகரத்தில் பெற்ற இராமானுஜர் தம் சீடரிடம் கொடுத்து வைக்க, அந்நூல் அன்றிரவே களவாடப்பட,அந்நூல் முழுவதையும் ஒரே நாளிரவில் கற்றிருந்த இராமானுஜரின் சீடர், "அதை இங்கேயே சொல்லவா? இரண்டாற்றங்கரை நடுவே சொல்லவா?' எனக் கேட்டஅவர் யார் தெரியுமா? '' என்று நான் கேட்டபோது,"கூரத்தாழ்வார் தன் குருவான இராமானுஜருக்காகத் தன் கண்களையே இழந்த சீடர். அடடா, இவரைப் பற்றி உடனே சொல்லாமல் போனேனே'' என்றுஹெட்போன் பாட்டி புலம்பியவாறு, திருவரங்கத் திசைநோக்கி ஒரு வணக்கம் சொல்ல, பேத்தியும் எந்தக் கேள்வியும் கேட்காமல் அந்தத் திசை நோக்கிவணங்கியது.

"சரியாகச் சொன்னீர்கள் அம்மா... கூரத்தாழ்வார் கோயிலில் அவருடைய கல் திருமேனிக்குத் தீப அலங்காரம் காட்டும்போது அவருடைய பெருமைகளை
எல்லாம் எடுத்துச் சொல்வார்கள். அதாவது அவரோட பயோடேட்டா...'' என்று விளக்கம் சொல்லிவிட்டுத் தொடர்ந்தேன்.

"லட்சம் சுலோகங்கள் கொண்ட நூலைப் படித்து ஒரே இரவில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலை உடையவராகத் திகழ்ந்திருக்கிறார் கூரத்தாழ்வார். இன்றையதலைமுறையில் நம் செல்போன் எண்ணைக் கூட நம்மால் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லையே!...'' என்று நான் கூறி முடித்தேன்.

"அதெல்லாம் அந்தக் காலத்தோட சரிங்க... இப்ப நீங்க சொல்றமாதிரியெல்லாம் ஆட்கள் இருக்காங்களா? அதைச் சொல்லுங்க முதலில்'' என்று மீசைக்காரர்
கேலியாகக் கேட்டார்.

"இவர் கேக்கிறதும் நியாயமாத்தான் படுது. எதைச் சொன்னாலும் அந்தக் காலத்திலே, 500 வருசங்களுக்கு முந்தி, சங்ககாலத்தில... அப்பிடின்னே சொன்னாஎன்ன அர்த்தம்? எல்லாம் அந்தக் காலத்தோடு முடிந்துவிட்டதா?'' என்று மற்றொரு பெரியவரும் ஆதங்கத்தோடு முணுமுணுத்தார்.

"சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர், கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை, மகாகவி பாரதியார் போன்றோர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த பெரியவர்தான்.

இன்றைக்கும் இளம்வயதில் சாதனை நிகழ்த்தும் எத்தனையோ குழந்தைகளை, இளைஞர்களை நாம் "கின்னஸ்' சாதனைகளில் பார்த்துக் கொண்டுதானேஇருக்கிறோம்? சரி, இந்தக் காலத்தில் வாழ்ந்த, நமது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரிடம் விருது பெற்ற ஒருவரைப் பற்றி உங்களுக்குச்சொல்லட்டுமா?'' என்று கேட்டேன்.

"ஓ.கே. ஓ.கே.'' என்று பேத்தி மகிழ்ச்சியுடன் சத்தமிட்டது. உடனே ஹெட்போன் பாட்டி "என்னை மாதிரியே, இவளுக்கும் எம்.ஜி.ஆர். படம்னா ரொம்பப் பிடிக்கும்,
என்ன வித்யாசம் தெரியுமோ? நான் டூரிங் தியேட்டரில் பார்த்த அவரோட படங்களை இப்ப இவ "லேப்-டாப்'ல பார்க்கிறா... அதுதான் இந்த மகிழ்ச்சி'' என்று
விளக்கமாகச் சொன்னார்.

"நீங்க சொல்ல வர்ற விசயத்தைச் சொல்றதுக்கு முன்னாடி "சமப்பிரதான வித்வான்கள்' என்று நம்ம தமிழையா சொன்னாரே? அது கொஞ்சம் புரியலையே!''என்று ஒருவர் ஞாபகப்படுத்தினார்.

"சமப்பிரதானம் என்றால் சம அந்தஸ்து. எங்களது இராமநாதபுர சமஸ்தானத்தில் பாஸ்கர சேதுபதி சபையில் எத்தனையோ தமிழ்ச் சான்றோர்கள் இருந்துதமிழ் வளர்த்திருக்கிறார்கள். அவர்களில் தமிழ்மொழியிலும், வடமொழியாகிய சமஸ்கிருதத்திலும் பெரும் புலமை பெற்ற அறிஞர்களை சமப்பிரதானவித்வான்கள் என அழைத்ததோடு அவர்களது கைகளில் "தங்கத் தோடா' (ஒருவகை அணிகலன்)வையும் அணிவித்துப் பாராட்டுவார்களாம். மு.இராகவஅய்யங்கார், ரா.ராகவையங்கார், நாராயண அய்யங்கார் போன்றோர் சமப்பிரதான வித்வான்களாகத் திகழ்ந்ததாக என் தந்தை எனக்குச் சொல்லியிருக்கிறார்'' என்றுதமிழாசிரியர் பெருமையோடு சொன்னார்.

"இப்ப நீங்க சொல்லுங்க' என்று தமிழ்மணி கேட்க, "பல்வகைத் திறமைகளை உடையவர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். ஒரே ஒரு நூலைமுழுமையாகக்கற்று அந்த நூலில் அஷ்டாவதானியாகப் பலர் திகழ்ந்திருக்கிறார்கள். நம் தமிழ்மறையான திருக்குறளை முழுமையும் கற்றதோடு அதில்அஷ்டாவதானம் செய்து காட்டி உலக மக்களை வியக்க வைத்தவர்தான் "திருக்குறள் அஷ்டாவதானி இராமையா' என்பவர். இவர் தமிழர் எழுத்தாளர்கள் பலர்தோன்றிய கோவில்பட்டியைச் சேர்ந்தவர். இவர்தான் முதலமைச்சரிடம் விருது பெற்றவர். இவருக்கு இந்த ஆற்றல் எப்படி வந்தது தெரியுமா?'' என்று நான்வழக்கம்போல கேட்டேன்.

"என்ன திருச்செந்தூர் முருகன் வந்து கனவில் வரம் தந்தாரா?'" என்று மீசைக்காரர் கேட்டவுடன், அங்கிருந்த பலரின் முகமும் சற்றே வாடிவிட்டது. அதைப்பார்த்த நான், "ஐயா சரியாகச் சொன்னீர்கள். ஆனால், முருகப்பெருமான் மட்டுமில்லை எல்லாக் கடவுளர்களும் முயற்சி (தவம்) உடையவர்களுக்குத்தான் வரம்தருவார்களே அன்றி உழைக்காதவர்களை - உண்மை நிலை உணராதவர்களை - உலகிற்கு அடையாளம் காட்டுவதில்லை...'' என்று சொன்னேன்.

"சபாஷ் ஐயா. நீங்கள் சொல்வதுதான் உண்மை. இவர் எதற்காக இப்படிக் கேள்வி அம்புகளை விடாமல் தொடுக்கிறார் என்று தெரியவில்லையே?'' என்று
ஆதங்கத்தோடு கேட்டார் தமிழையா.

"இருக்கட்டும் ஐயா. இவர் இப்படிக் கேட்பதனால்தான் நாம் நல்ல செய்திகளை உலகிற்குச் சொல்ல முடிகிறது'' என்று சொன்ன நான், "திருக்குறள்
அஷ்டாவதானி இராமையா அவர்களுக்குப் பார்வை கிடையாது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?'' என்று கேட்டேன்.

இதைக் கேட்ட பலர் திடுக்கிட்டுப் போனார்கள். "வாட்? திஸ் இஸ் அமேசிங்'' என்று பேத்தி வியப்படைய, நான் தொடர்ந்தேன்...
"உண்மைதான். இவரது வரலாற்றை ஒருமுறை ஒரு புத்தகத்தில் படித்துத் தெரிந்து கொண்டேன். இவர் பிறவியிலிருந்தே பார்வைக் குறைபாடு உடையவராகப்பிறக்கவில்லை. இடையில்தான் பார்வைக் குறைபாடு ஏற்பட்டதாம். படித்து முடித்து மின்சாரத் துறையில் உள்ளூரில் வேலை பார்த்து வந்தபோதுதான் பார்வைபோயிற்றாம். அதனால் வேலை போய் குடும்பத்தில் வறுமை நிலை ஏற்பட்டதாம். அப்போதுதான் ஓர் அதிசய நிகழ்வு நடந்ததாகக் குறிப்பிடுகிறார் இராமையா.

"நான் வாழ்க்கையில் என்ன செய்வது வாழ்வதா வேண்டாமா? என்று விரக்தியோடு வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தேன். அப்போது திருச்செந்தூருக்கு"பாதயாத்திரை' போன சந்நியாசி ஒருவர் என் வீட்டுத் திண்ணையில் என்னோடு அமர்ந்து என் நிலை பற்றி விசாரித்தார். பின் சற்றே யோசித்து ஒரு வழியும்சொன்னார்'' என்று நான் சொல்லிக் கொண்டு வந்தேன்.

"வாட் இஸ் பாதயாத்திரை?'' என்று பேத்தி தன் பாட்டியிடம் கிசுகிசுக்க, "கால்நடையாகவே நடந்து திருச்செந்தூருக்கோ, பழனிக்கோ, திருப்பதிக்கோ செல்லும்வேண்டுதல்தான் பாதயாத்திரை. அது ஒரு நம்பிக்கை'' என்று விளக்கம் சொன்னார் ஹெட்போன் பாட்டி.

"இப்ப வேளாங்கன்னி மாதா கோயிலுக்குக்கூட பாதயாத்திரையாக கிறித்தவ மதப் பக்தர்கள் செல்வதை நம்மால் பார்க்க முடிகிறதே'' என்று சொன்ன தமிழ்மணி,"ஐயா அந்தச் சந்நியாசி என்ன யோசனை சொன்னாராம்?'' என்று கேட்டார்.

நானும் விட்ட இடத்தில் தொடங்கினேன். "உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா? எனக் கேட்ட சந்நியாசி, நான் சொல்லுகிற மந்திரத்தை 48 நாள்களுக்குச்சொல்லிக் கொண்டு வாருங்கள். முருகப் பெருமானை முன்னிறுத்தி ஈர ஆடையோடு தினம் சொல்லி வாருங்கள். அப்படிச் சொன்னால்...'' என்று சொல்லிநிறுத்திய நான்... மீசைக்காரரைப் பார்த்தபடி, "உங்களுக்குப் பார்வை திரும்ப வரும் என்று சொல்லவில்லை... அஷ்டாவதானம் கை கூடும் அந்த மந்திரம்தான்நினைவாற்றலைக் கூட்டும் எனச் சொன்னாராம். திருக்குறள் இராமையாவும் அதனைக் கடைப்பிடித்து மனதில் முருகனை நினைத்து திருக்குறளையும் மனனம்செய்யத் தொடங்கினாராம்... அஷ்டாவதானம் கைகூடியதாம்...'' என்று நான் சொல்லி முடிக்க. "அந்த மந்திரம், என்ன மந்திரம்?'' என்று எல்லாரும் ஆவலோடு
கேட்க, நான் புன்னகை செய்தேன்...
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com