அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக வாய்ப்புள்ள  இந்தியப் பெண்!

அடுத்த   அமெரிக்க தேர்தலில்,   ஜனநாயக கட்சி   சார்பில்   கமலா போட்டியிட்டாலும்    சரி,  அல்லது மிஷேல்  போட்டியிட்டாலும்  சரி...     யார் வெற்றி   பெறுகிறார்களோ   அவர்    அமெரிக்க  அரசியலில்  ஒரு ...
அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக வாய்ப்புள்ள  இந்தியப் பெண்!
Updated on
1 min read

சென்னையை பூர்வீகமாக கொண்ட கமலா தேவி  ஹாரிஸ் என்ற பெண் குழந்தை கலிபோர்னியா நகரில் பிறந்ததால்  முறைப்படி கமலா  அமெரிக்க குடிமகள் ஆனார்.

கல்வியில்  சூட்டிகையாக  இருந்த  கமலா படிப்படியாக அரசியலில் நுழைந்து தற்போது ஜனநாயகக் கட்சில் ஒரு முக்கிய பெண் அரசியல்வாதியாக திகழ்கிறார். இதுமட்டுமில்லாமல், 2004 முதல் 2011 வரை சான் பிரான்சிஸ்கோ மாநில  அட்டார்னி ஜெனரலாகவும், 2011 முதல் கலிபோர்னியா மாநில  அட்டார்னி ஜெனரலாகவும்  பதவி வகித்துள்ளார்.

தற்போது நடந்து முடிந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கலிபோர்னியா மாநில  செனட்டர் பதவிக்கு போட்டியிட்டு அபாரமாக வெற்றிக்  கனியைக் கொய்திருக்கிறார்.

முன்னதாக, கமலாவின் திறமைகளை   உணர்ந்த  கட்சி மேலிடம் அவருக்கு கலிபோர்னியா ஆளுநர் பதவி, உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி அல்லது துணை ஜனாதிபதி பதவி வழங்கவும்  ஆலோசித்தது. ஆனால்  எதுவும்  நிறைவேறவில்லை.  இப்போது,  செனட்டர் தேர்தலில் தற்போது கமலா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்க   அரசியல் சரித்திரத்தில்  முதல் முறையாக ஹிலாரி கிளிண்டன் பெண் ஜனாதிபதியாக பதவி ஏற்பார் என வெகுவாக எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், துரதிஷ்டவசமாக ஹிலாரி தோல்வியைத் தழுவினார்.

இந்த சூழ்நிலையில், கமலா ஹாரிஸின் திறமைகளையும், அரசியல் யுக்திகளையும்,   நுணுக்கங்களையும்   கண்டு  திருப்பதி அடைந்திருக்கும்  ஜனநாயகக்  கட்சி   தலைவர்கள்   2020-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலாவைப்  போட்டியிட வைக்கலாம்  என்ற கருத்து எழுந்துள்ளது.  அமெரிக்க குடிமக்கள்  மிஷேல்  ஒபாமாவைப்  போட்டியிட வைக்கலாம்   என்று  கருத்துக்களை  பதிவு செய்து வருகிறார்கள்.

அரசியலில்  டிரம்ப்  திடீரென்று  நுழைந்து  வெற்றி பெற்றது போல்,  ஜனநாயகக்   கட்சியிலும்  கட்சியின்  எதிர்காலத்திற்காக  அதிரடியான மாற்றங்கள் ஏற்படலாம்.  அடுத்த   அமெரிக்க தேர்தலில்,   ஜனநாயக கட்சி   சார்பில்   கமலா போட்டியிட்டாலும்    சரி,  அல்லது மிஷேல்  போட்டியிட்டாலும்  சரி...     யார் வெற்றி   பெறுகிறார்களோ   அவர்    அமெரிக்க  அரசியலில்  ஒரு  புதிய  சாதனையை  படைப்பார்.  புதிய  அத்தியாயத்தை எழுதுவார் என்பது
மட்டும்  நிச்சயம்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com