வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

முயல் குட்டி குழந்தைகளை முடக்கிப் போடும் ஸ்மார்ட் ஃபோன்கள்!

2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளை அதிக பட்சம் 1 மணி நேரத்துக்கு மேல் டி.வி பார்க்கவோ, ஸ்மார்ட் ஃபோனில் விளையாட அனுமதிக்கவோ கூடாது.

News image
Updated On :21 அக்டோபர் 2016, 12:33 pm

குழந்தைகள் அழுதாலோ, அடம் பிடித்தாலோ அவர்கள் கைகளில் ஸ்மார்ட் ஃபோன் அல்லது செல்ஃபோனைத் திணிப்பது தற்போது பலருக்கும் வாடிக்கையாக இருக்கிறது. ஸ்மார்ட் ஃபோன் கையில் கிடைத்ததும் குழந்தைகள் அழுகையை நிறுத்தி விடுவதென்னவோ உண்மை தான். ஆனால் அப்படிச் செய்வது குழந்தைகளின் நலனுக்கு உகந்ததல்ல என்கிறது அமெரிக்க மருத்துவர்களின் ஆய்வறிக்கை ஒன்று. கைக்குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், தொடக்கப் பள்ளி குழந்தைகள் என பலதரப்பட்ட நிலையிலிருக்கும் குழந்தைகளின் வளர்ச்சியிலும் இந்த் ஸ்மார்ட் ஃபோன்கள் விரும்பத் தகாத விளைவுகளையே ஏற்படுத்துவதாக அமெரிக்காவிலிருக்கும் மிச்ஸிகன் பல்கலைக் கழக வளாகத்தில் இயங்கும் மாட் குழந்தைகள் நல மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் ஜென்னி ராதேஸ்கி தனது ஆய்வறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். 
ஏனெனில் 1 முதல் 5 வயது வரையிலான பருவம் என்பது குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் பரபரப்பான வளர்ச்சிக்குரிய காலகட்டம். இந்தக் காலகட்டத்தில் அசைவே இல்லாமல் ஸ்மார்ட் ஃபோன் வைத்து விளையாடிக் கொண்டிருப்பது என்பது குழந்தைகளின் இயல்பான இயக்கத்தை முடக்கும் முயற்சி. 
இந்தப் பருவத்தில் குழந்தைகள் ஆடி ஓடி விளையாட வேண்டும், புதிய விசயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும், புதுப் புது இடங்களைப் பார்க்க வேண்டும். சரிவிகிதமாக உண்ணப் பழக வேண்டும். சராசரியாக வரையறுக்கப்பட்ட அளவுக்காவது அவுட்டோர் கேம்ஸ் என்று சொல்லப்படக் கூடிய விளையாட்டுகள் சிலவற்றில் ஈடுபட்டுக் களைப்படைய வேண்டும், போதுமான அளவுக்குத் தூங்க வேண்டும். பிரச்சினகளின் போது தங்களது உணர்வுகளை எப்படியெல்லாம் கட்டுப்படுத்தலாம்? எப்படியெல்லாம் வெளிப்படுத்தலாம் என்று பெற்றோர்கள் மற்றும் பெரியோர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். 
செய்வதற்கு இத்தனை விசயங்கள் இருக்கும் போது பழைய காலத்து வீடுகளில் பயன்படுத்தப் படும் ஆட்டுக்கல் போல ஸ்மார்ட் ஃபோன்களைக் கையில் வைத்துக் கொண்டு உட்கார்ந்த இடத்திலேயே சமர்த்தாய் அசைவில்லாமல் இருப்பதென்பது மிகவும் தவறான வாடிக்கை. பெருகி வரும் புதுப் புது மன நல மற்றும் உடல் நலக் கோளாறுகளை மனதில் வைத்து குழந்தைகளின் இயல்பான இயக்கத்தை தடுக்கக் கூடிய வகையிலான டி.வி, ஸ்மார்ட் ஃபோன், வீடியோ கேம்ஸ், போன்ற எலக்ட்ரானிக் கேட்ஜெட்டுகளின் புழக்கத்தை ஒரு வரையறைக்குள் கொண்டு வந்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது இப்போது. உதாரணமாக 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளை அதிக பட்சம் 1 மணி நேரத்துக்கு மேல் டி.வி பார்க்கவோ, ஸ்மார்ட் ஃபோனில் விளையாட அனுமதிக்கவோ கூடாது. குழந்தைகளுக்கு ஓய்வு நேரம் அதிகம் இருந்தால் அவர்களை பெற்றோர் அல்லது நண்பர்களுடன் ஏதாவது ஒரு வேலையில் சுவாரஸ்யமாக ஈடுபட வைக்கலாம்.
வீடியோ சாட்டிங் என்பது பொழுது போகாமல் இருக்கும் போது நண்பர்கலுடன் உரையாடக் கண்டு பிடிக்கப் பட்ட தொழில்நுட்பம் அல்ல. அது எளிதில் நேருக்கு நேராக தொடர்பு கொள்ள முடியாதவர்களை அணுகுவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பம் எனும்படியான சில முக்கியமான விசயங்களை சிறுவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் விலைமதிப்பற்ற பல மணி நேரங்களை இப்போதெல்லாம் வாட்ஸப், ஃபேஸ்புக், ஸ்கைப் என்ற பெயரில் சாட்டிங்குகள் ஆக்ரமிப்பது அவர்களுக்கு நேர விரயம் என்பதும் புரிய வைக்கப்பட வேண்டும்.  
இன்னும் சொல்லப் போனால் பிறந்து 18 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு எலக்ட்ரானிக் மீடியாவின் அறிமுகம் அதாகப் பட்டது டி.வி மற்றும் கம்ப்யூட்டர் இத்யாதிகளின் அறிமுகம் இல்லாமலிருப்பது உத்தமம் என அந்த ஆய்வறிக்கை தெளிவாக விவரிக்கிறது. 
சில நேரங்களில் நமது குழந்தைகளின் அழுகைக்கும், பிடிவாதத்துக்குமான காரணமாகவும் செல்ஃபோன்களே தான் இருக்கின்றன. அப்படிபட்ட உபகரணங்களை அவர்களிடமிருந்து தூரமாக்கி விட்டு சரியான நேரத்தில் விழித்தெழ, சரியான நேரத்தில் சாப்பிட, தூங்க, திட்டமிட்டு தங்களது வேளைகலைப் பட்டியலிட்டு அதன்படி சரியாக அவற்றை முடிக்க, சந்தோசமாக விளையாட என இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க அவர்களுக்கு உதவ வேண்டியது பெற்றோர்களின் கடமை என்கிறது மேற்சொன்ன அமெரிக்க ஆய்வறிக்கை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.