

அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு அவசர அவசரமாக வந்தவர், "எனக்கு ஒரு வாரமா மிரட்டல் வருது சார்'' என்றார்.
"மொட்டைக் கடிதமா?'' என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.
"இல்லை'' என்றார் வந்தவர்.
"கொலை மிரட்டலா?'' கேட்டார் இன்ஸ்பெக்டர்.
"இல்லை சார்'' என்றார் வந்தவர்.
"பக்கத்து வீட்டுக்காரர் சண்டை போட்டு கையைக் காலை உடைக்கிறேன்னு மிரட்டுறாரா?''
"அதெல்லாம் இல்லை சார்... போனிலே மிரட்டல் வருது சார்''
"யார் மிரட்டுறது?''
"டெலிபோன் பில் கட்டலைன்னா இணைப்பு துண்டிக்கப்படும்ன்னு மிரட்டல் வருது சார்''
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.