உலகை உலுக்கி வரலாற்றில் இடம் பெற்ற சில குறிப்பிடத்தக்க கொடூர வெள்ளச் சேதங்கள்!

மக்கள் இயற்கையோடு போராடியேனும் தங்களது 'வழி வழி வந்த' அதாவது பரம்பரையாகப் பல தலைமுறைகளாக நீடிக்கும் வாழ்விடங்களை மாற்றிக் கொள்ள முன்வருவதே இல்லை. 
உலகை உலுக்கி வரலாற்றில் இடம் பெற்ற சில குறிப்பிடத்தக்க கொடூர வெள்ளச் சேதங்கள்!
  • ஹுவாங் ஹ என அழைக்கப்படும் சீனாவின் புகழ் பெற்ற மஞ்சள் ஆறு அடிக்கடி வெள்ளப் பெருக்கெடுத்து ஓடி, எல்லையற்றுப் பொங்கிப் பிரவகிப்பதற்காகவே சீன சரித்திரத்தில் மட்டுமல்ல சர்வதேச சரித்திரத்திலும் பிரபலம் அடைந்ததாகும். 1931 ஆம் ஆண்டில் இந்த ஆற்றில் நிகழ்ந்த மிகப் பெரிய வெள்ளம் காரணமாக 8,00,000 முதல் 40,00,000 மக்கள் இறந்தனர்.
  • அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 1993 ஆம் ஆண்டில் நிகழ்ந்த மிகப்பெரிய வெள்ளம் மக்களின் இயல்பு வாழ்வைப் பெருமளவில் பாதித்து அவர்களின் வீடு, வயல்கள், மக்களின் அத்யாவசிய உடமைகள், உணவுப்பொருட்களோடு கணிசமான அளவில் உயிரிழப்பையும் ஏற்படுத்தியது. அப்போது அமெரிக்கா அடைந்த பொருட்சேதம் மற்றும் உயிர்சேதத்தின் அடிப்படியில் இந்த வெள்ள சேதமும் வரலாற்றில் இடம்பெற்றது.
  • 1998 ஆம் ஆண்டில் சீனாவின் யாங்சே ஆற்றின் வெள்ளப் பெருக்கு பெரும் பேரழிவாக பதினான்கு மில்லியன் மக்களை பாதித்து அவர்களது வீடு வாசல் அனைத்தையும் இழக்க வைத்தது.
  • 2000 ஆம் ஆண்டில் நிகழ்ந்த மொசாம்பிக் பெருவெள்ளம் நாட்டின் பெரும்பான்மையான நிலப்பகுதிகளை மூன்று வாரங்களுக்கும் மேல் முழுமையாக மூழ்கடித்தது, அதன் விளைவாக பல ஆண்டுகளுக்கு அந்த நாடு சீரழிந்து தலை தூக்க இயலாத நிலைமை ஏற்பட்டது.
  • வெப்ப மண்டலங்களில் ஏற்படும் சூறாவளிக்காற்று பொங்கும் புயல் பேரலை எழுச்சியுடன் கூடிய விரிவான வெள்ளப்போக்கை, பின்வரும் பல இடங்களில் ஏற்படுத்தியது:
  • போலா சூறாவளிக்காற்று கிழக்கு பாகிஸ்தானை அதாவது தற்சமயம் பங்களாதேஷ் நாட்டை 1970 ஆம் ஆண்டில் மிக மோசமாகத் தாக்கியது.
  • 1975 ஆம் ஆண்டு சீனாவை தைபூன் நினா என்ற சூறாவளி தாக்கியது.
  • வெப்ப மண்டல சூறைக்காற்று அள்ளிசண் 2001 ஆம் ஆண்டில் டெக்சாஸ் மாநிலத்திலுள்ள ஹியூஸ்டன் நகரத்தை கடுமையாக தாக்கியது.
  • கத்ரீனா சூறாவளி நியூ ஓர்லீன்ஸ் எனும் மாகாணத்தையே முற்றிலுமாக 2005 ஆம் ஆண்டில் நீரில் மூழ்கடித்தது. 'லேவீ' எனப்படும் தடுப்புக்கரையை சரிவர அமைப்பதில் தோல்விகண்டதால், அந்த மாநிலத்தில் மிகையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மாநிலத்தையே சீர்குலைய வைத்தது.

கொடூர வெள்ளச் சேதங்களுக்கென வரலாற்றில் நிலையான ஆதாரப் பதிவுகள் இருந்த போதும் ஒரு விஷயத்தை நாம் இங்கே நிச்சயம் உணரவேண்டும். எங்கு, எப்போது, யார் வெள்ளச்சேதத்தில் அகப்பட்டு உயிராபத்தான சூழலைக் கடக்க நேர்ந்த போதும் சரி மனிதர்களின் மனம், ‘ஐயோ வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டு இங்கேயே வாழ வேண்டும் என்பது தங்கள் தலைவிதியா? என்ன? தாம் ஏன் வேறிடம் நோக்கி இடம்பெயர்ந்து தங்களது வாழ்வை அமைத்துக் கொள்ளக் கூடாது என எண்ணி தாங்கள் வாழ்ந்த இடங்களைப் புறக்கணித்ததே இல்லை.

மக்கள் இயற்கையோடு போராடியேனும் தங்களது 'வழி வழி வந்த' அதாவது பரம்பரையாகப் பல தலைமுறைகளாக நீடிக்கும் வாழ்விடங்களை மாற்றிக் கொள்ள முன்வருவதே இல்லை. 

அந்த இடத்தில் தான் இயற்கையும் ஆற்றலும், மனிதர்களின் போராட்ட குணமும் ஒரு புள்ளியில் கைகோர்க்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com