இப்படியா குழந்தையைப் பாத்துக்கிறது? உங்க ஓட்டு யாருக்கு? அம்மா Vs அப்பா

மேற்சொன்ன வசனம் வெவ்வேறு மாடுலேஷனில் நம் வீடுகளில் கூட ஒலித்திருக்கும்.
இப்படியா குழந்தையைப் பாத்துக்கிறது? உங்க ஓட்டு யாருக்கு? அம்மா Vs அப்பா

இப்படியா குழந்தையைப் பாத்துக்கிறது? உங்களை எல்லாம் நம்பினால்?!’ இந்த வசனம் வெவ்வேறு மாடுலேஷனில் நம் வீடுகளிலும் ஒலித்திருக்கலாம். ஒரு அஞ்சு நிமிஷம் குழந்தையைப் பாத்துக்கச் சொன்னா இப்படியா பொறுப்பில்லாம இருப்பீங்க என்று இளம் தந்தையைத் திட்டும் இளம் தாய்மார்களை நாம் சந்தித்திருப்போம். 

அம்மாக்களைப் போல அப்பாக்களால் பொறுமையாக குழந்தையை வளர்க்க முடியாது என்று பலரும் நம்புகிறார்கள்.

அது உண்மையும் கூட. ஆனால் தந்தைமார்கள் அதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள். இதென்ன பெரிய விஷயமா என்று சொல்வார்களே தவிர அவர்களால் அம்மாவை போல ஒரு பாதுகாப்புணர்வை குழந்தைக்கு ஏற்படுத்த முடியாது.

இதற்குக் காரணம் அப்பா வேலை, குடும்பப் பொறுப்பு என சிந்தித்துக் அதற்கேற்றபடி ஓடிக் கொண்டிருப்பதால் குழந்தை வளர்ப்பில் பங்கெடுத்துக் கொள்ள முடிவதில்லை. 

ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் அப்பாக்கள் அனைவரும் ஒரே மாதிரிதான். கஷ்டம் என நினைக்காமல் இஷ்டப்பட்டு குழந்தைகளைப் உயிராகப் பார்த்துக் கொள்ளும் அம்மாக்களை ஏதாவது குறை சொல்லி, அவர்கள் தங்களுடைய பொறுப்பின்னைமையை மறைக்கப் பார்ப்பார்கள் அப்பாக்கள்.

அம்மா வெளியே போகும் போதோ அல்லது கூடவே இருக்கும் போதோ கூட சில அப்பாக்கள் தங்கள் குழந்தைகளை கவனமாக கையாள்வதில்லை. உலகம் முழுவதும் தாய்மையைக் கொண்டாடுவதற்குக் காரணம் அம்மா என்பதுதான் ஒரே அதி உண்மையான உறவு.

அம்மா இல்லாத சமயங்களில் சில சமயம் அப்பா குழந்தைகளை கவனித்துக் கொள்ள நேரும் போதே எப்படியெல்லாம் சொதப்புவார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

இந்த குறும்பு ஃபோட்டோக்களும் அதை தான் சொல்கிறது. 

இது போன்ற விடியோக்களும் மாம் அண்ட் டாட் என்ற தலைப்பில் இணையத்தில் உள்ளன.

காமெடிக்காக இவை பகிரப்பட்டிருந்தாலும் குழந்தை வளர்ப்பு என்பது காமெடியான விஷயம் அல்ல.

ஒரு குழந்தையை பெற்று வளர்த்து ஆளாக்கி பொறுப்புள்ள மனிதனாக சமூகத்திற்கு பங்களிப்பவனாக ஆகுவதென்பது அம்மாவின் கைகளில்தான் உள்ளது என்பது தான் உலகம் அறிந்த உண்மை.

அதற்கென அப்பாக்களையும் குறை சொல்ல முடியாது. அன்பான பொறுப்பான பாசமான தந்தைகளால் தான் பல குழந்தைகளின் உலகம் வண்ண வண்ணமாக இயங்குகிறது.

அம்மா அப்பா இருவரும் அவரவர் பங்களிப்பை உணர்ந்து அதற்கேற்ப குழந்தையை உடமையாக நினைக்காமல் உயிராக, சக ஜீவனாக, தங்களின் இன்னொரு பகுதியாக நினைத்து அவர்களுக்கான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் வரை பாதுகாப்பதே இருவரும் சேர்ந்து செய்ய வேண்டிய செயல். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com