Enable Javscript for better performance
Dinamani.com's|‘கொஞ்சம் விஷம் கொடுத்து கொன்றால் தான் என்ன? என்ற சமூகம் இன்று என்னைக் கொண்டாடுகிறது’- Dinamani

சுடச்சுட

  

  ‘கொஞ்சம் விஷம் கொடுத்து கொன்றால் தான் என்ன? என்ற சமூகம் இன்று என்னைக் கொண்டாடுகிறது’ நோ காம்ப்ரமைஸ் நேர்காணல் வித் ஜீவா!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 26th October 2018 03:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  no_compromise

   

  சுயமரியாதை மற்றும் சமூக அங்கீகாரத்தில் எங்கும், எப்போதும் ‘நோ காம்ப்ரமைஸ்’ 

  வாழ்வில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறிச் செல்ல விரும்புபவர்களின் தாரக மந்திரமாக இருக்க வேண்டியவை இந்த வார்த்தைகளே!

  இந்த வார்த்தைகளுக்கு உதாரணர்களாகக் காட்டத்தக்க மனிதர்கள் நம்மிடையே எல்லா இடங்களிலும் சிதறிக் கிடக்கிறார்கள். வாரம் ஒருவரென அவர்களுடன் உரையாடலாம் வாருங்கள்.

  இந்த வார விருந்தினர் திருநங்கை ஜீவா சுப்ரமண்யம்!

  தமிழகத்தின் கடைக்கோடி கிராமம் ஒன்றில் பிறந்து... ஒரு திருநங்கையாகத் தன்னை அங்கு சுயமரியாதையுடன் நிலை நிறுத்திக் கொள்ள முடியாமல் தவித்துப் பின் பிழைப்புத் தேடி சகலமானவர்களையும் போல் சென்னை நோக்கி ஈர்க்கப்பட்டவர் ஜீவா. சென்னைக்கு வந்த பின் அவரது வாழ்க்கை எப்படியெல்லாம் திசைமாறி பல தடங்கல்களைக் கடந்து தற்போது ஒரு திறமையான ஒப்பனைக் கலைஞராகவும், நடிகையாகவும் பரிமளித்து வருகிறார். 

  வாழ்வில் அடுத்த அடியை எங்கே எடுத்து வைப்பது? எங்கே சென்றாலும் தன்னை கேலிக்குரியவளாகக் கருதி எள்ளி நகையாடும் இந்த சமூகத்தின் பார்வையில் தனக்கான கெளரவத்தை எப்படி மீட்டெடுப்பது? எப்படியாவது பிறர் மதிக்க வாழ்ந்து காட்டியே ஆக வேண்டும். விரும்பியதைக் கற்கும் ஆர்வம் இருக்கிறது. அதில் ஜெயிக்கும் திறமை இருக்கிறது. அது போதும். மூலையில் அமர்ந்து அழுவதைக் காட்டிலும் விரும்பியதில் வென்று விட்டு அடுத்தடுத்த பிறவிகளிலும் மீண்டுமொரு திருநங்கையாகவே பிறக்க விரும்பும் மன உறுதியை வளர்த்துக் கொண்டால் என்ன? வாழ்வில் சோர்வு தன்னைத் துரத்தும் போதெல்லாம் இப்படித்தான் யோசித்ததாகச் சொல்கிறார் ஜீவா. 

  அந்த உணர்வு தந்த வெற்றியின் அடையாளம் தான் இன்றைய ஜீவா!

  சொந்த வீட்டிலிருந்து வெளியேறியது முதல் இன்றைய சென்னை வாழ்க்கை வரையிலாக தன் வாழ்வில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களை தினமணி ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல் வாயிலாக நம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

   

  முன்னெப்போதைக் காட்டிலும் இப்போது நாம் திருநங்கைகள் குறித்து அதிகம் பேசத்தொடங்கி இருக்கிறோம். அவர்களுக்கான சமூக அங்கீகாரமும், சுயமரியாதையும் எள்ளளவும் குறையக் கூடாது. அவர்கள் வேற்றுக் கிரகவாசிகள் அல்ல, நம்மைப்போன்ற சகமனிதர்களே எனும் சகிப்புத் தன்மையும், நியாய உணர்வும் கொண்டவர்களாக இளைய தலைமுறையினர் மாறி வருகின்றனர். அந்த மனநிலையை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் தினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல் இருக்குமென நம்புகிறோம்.

  இனி ஒவ்வொரு வாரமும் வெள்ளியன்று ஒரு புது விருந்தினருடன் நமது தினமணி இணையதளத்தில் நோ காம்ப்ரமைஸ் நேர்காணல்கள் வெளியாகவிருக்கின்றன.

  நேர்காணலைக் காணும் வாசகர்கள்  தங்களது கருத்துக்களைப் பதிவு செய்ய மறக்க வேண்டாம்.

  மீண்டுமொரு  புது ‘நோ காம்ப்ரமைஸ்’ விருந்தினருடன் அடுத்த வெள்ளியன்று சந்திப்போம்.

  நன்றி!

  Video clippings courtesy: 

  ‘அவள் நங்கை’ short film

  DharmaDurai movie

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai