இந்தியப் பிரிவினைக்குப் பிறகு லேடி மவுண்ட் பேட்டன் செய்த நல்ல காரியம்! (வி. கல்யாணம் நேர்காணல் பார்ட் -2)

காந்தி இறந்ததுக்கு அப்புறம் லேடி மவுண்ட் பேட்டன் என்னை அவளோட சேர்ந்து வேலை பார்க்க கூப்பிட்டா. 1000 ரூபாய் சம்பளம் தரேன்னா. நான் சம்பளம் வாங்க மாட்டேன்னுட்டேன். ஏன்னா, ராஷ்ட்ரபதி பவன்லயே இருந்தேன்.
V Kalyanam interview part 2
V Kalyanam interview part 2

இந்திரா காந்தி, ராஜீவ் காந்திங்கிற பெயர்களால காந்தியின் வாரிசுகள் தான் இந்தியாவை அரசியல்ரீதியா ஆண்டுக்கிட்டு இருக்காங்கன்னு வெள்ளைக்காரங்க நினைக்கிறாங்கன்னு சொல்றீங்க இல்லையா, நேரு குடும்பத்துக்கு காந்திங்கிற பேர் எப்படி சொந்தமாச்சு? 

ஏன்னா, இந்திரா காந்தியோட ஹஸ்பண்ட் பேரு பெரோஸ் காந்தி. அந்த காந்திய வச்சுண்டு இங்க இவா நடத்திண்டு இருக்கா. அவ பிள்ளை ராஜீவ் காந்தியா போயிட்டார். அதுனால வந்தது இது.

அப்போ ஃபெரோஸ் காந்திங்கறது தான் அவரோட நிஜமான பேரா?

ஃபெரோஸ் காந்தி வாஸ் அ பார்ஸி. ஹி மேரீட் இந்திரா. அதனால தான் இந்த காந்தின்னு பேர் வந்துடுத்து கடைசி வரைக்கும்.

சிலர், நேரு காந்தி மேல தனக்கிருந்த அபிமானத்துல தான் நேரு இந்திரா பிரியதர்ஷிணின்னு வச்ச தன் மகளோட பெயரை இந்திரா காந்தின்னு மாத்தினதா சொல்றாங்களே.. அது நிஜமில்லையா?

ஆமாம், ஹஸ்பண்ட் பெயரைத்தானே வச்சுக்கனும். அது அவளுக்குப் பொருந்திப் போச்சி. அதை அவங்க அரசியல்ரீதியா பயன்படுத்திக்கிட்டாங்க. பிரியதர்ஷிணின்னு வச்சிருந்தா ஒருத்தரும் கவனிச்சிருக்க மாட்டா... தே மிஸ்யூஸ்டு ஹிஸ் நேம்.

சரி காந்தியை வெள்ளைக்காரனுக்கு ரொம்ப பிடிக்கும்னு சொன்னீங்க இல்லையா? இவர் மேலான அவங்க ஈர்ப்புக்கு குறிப்பிடத்தக்க காரணங்கள் ஏதாவது?

ஏன்னா, காந்தி நெவர் யூஸ்டு அப்யூசிவ் வேர்ட்ஸ் அகேன்ஸ்டு தி பிரிட்டிஷ். அவர் அன்பான முறையில அவங்களை இந்தியாவில இருந்து வெளியேறச் சொன்னார். அதனால தான் தே ஹேவ் கிரேட்டஸ்ட் ரிகார்ட் ஃபார் காந்தி. (They have greatest Regard for Gandhi). அவரோட இறப்பின் போதும் கூட நிறைய ஐரோப்பியர்கள் அழுதார்கள். இது மாதிரியான ஒரு மாமனிதர் 3000 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் தோன்றுவார்ன்னு கூட அவங்க சொல்றதுண்டு. அவரப்போல ஆள் பிறக்கறது கஷ்டம். By Love Not By Force.. By Love He threw the British from our Country. பிரிட்டிஷ்காரன் இந்தியாவை ஆளக்கூடாதுன்னு காந்தி விரும்பினார். அதனால தான் வெள்ளைக்காரன் வெளியேறினான்.  

நேர்காணலை காணொலியில் காண

காந்தியுடன் இருந்த போது நேரு,  மவுண்ட் பேட்டன் உள்ளிட்ட இந்திய மற்றும் பிரிட்டிஷ் தலைவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கும். அந்த அனுபவங்களைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள்?

நான் அவங்களை அடிக்கடி மீட் பண்றதுக்கான காரணம் காந்தி ஏதாவது சொன்னாத்தான். நானா போக மாட்டேன். அவங்க ஏதாவது வேலை சொன்னாத்தான். நேரு கிட்ட போயிருக்கேன். மவுண்ட் பேட்டன் கிட்ட போயிருக்கேன், காந்தி இறந்ததுக்கு அப்புறம் லேடி மெளண்ட் பேட்டன் என்னை அவளோட சேர்ந்து வேலை பார்க்க கூப்பிட்டா. 1000 ரூபாய் சம்பளம் தரேன்னா. நான் சம்பளம் வாங்க மாட்டேன்னுட்டேன். ஏன்னா, ராஷ்ட்ரபதி பவன்லயே இருந்தேன். ராஷ்ட்ரபதி பவன்னா என்ன? வைஸ்ராய் மாளிகையிலேயே நல்ல ஃபுட் கிடைக்குது. தங்கறதுக்கு நல்ல ரூம் கிடைக்குது. அப்புறம் என்ன வேணும்? அவகிட்ட என்னத்துக்கு வேலை பண்ணேன்னா? யுனைடெட் கவுன்சில் ஃபார் ரிலீஃப் அண்ட் வெல்ஃபேர். அதுக்கு அவ சேர்மன். எல்லாருக்கும் சம்பளம் இருந்தது அதுல. அதுல நிறைய பேர் இருந்தா. அவளோட சேர்ந்து டகோடாவுல பாகிஸ்தான் போவோம். அந்தக் காலத்துல பாலம் ஏர்போர்ட் கிடையாது. சப்தர்ஜங் ஏர்போர்ட் தான். அங்க தான் எல்லா ப்ளேனும் வரும். அங்க இருந்து டகோடா ஃப்ளைட் பாகிஸ்தானுக்குப் போகும். அங்க இருந்து அப்டக்டெட் இந்தியன் கேர்ள்ஸ் (அதாவது கடத்தப்பட்ட ஹிந்து பெண்களை) அவாளை எல்லாம் அங்கருந்து கொண்டு வந்து இங்க இந்தியாவில இருக்கற அவாளோட ஃபேமிலீஸ் கிட்ட சேர்க்கனும். அதே போல இங்க இந்தியாவில முஸ்லீம் பெண்களை இங்க இருக்கறவா கடத்தி வச்சுண்டு இருப்பா. அவங்களை மீட்டு பாகிஸ்தான் கொண்டு சேர்க்கனும். இப்படி பொழுது விடிஞ்சா ப்ளேன்ல வந்துண்டும், போயிண்டும் இருந்தோம். நடுவுல் ஒரு நாள், இல்ல ரெண்டு நாள் ரெஸ்ட் எடுப்போம். மறுபடியும் நானே போய் கேட்பேன். கேன் வி கோ டுடே ன்னு. அவ உடனே.. ஓ யெஸ், அரேஞ்ச் ஃபார் தி ப்ளேன்ம்பா... பிளேனுக்கு டெலிபோன் பண்ணா ரெடியாயிரும். இப்போ அதெல்லாம் நடக்காது. இப்படி டகோடால அடிக்கடி போய் வந்து இந்து கேர்ள்ஸை இந்தியாவில இருக்கக்கூடிய அவ அப்பா, அம்மா கிட்டயும், முஸ்லீம் கேர்ள்ஸை பாகிஸ்தான்ல இருக்கக் கூடிய அவா அப்பா, அம்மாக்கிட்டயும் ஒப்படைக்கிறது தான் எங்க வேலை. 

அதுல ரொம்பப் பேரு பிரெக்னண்ட். முஸ்லீம்ஸ் அவள பிரெக்னெண்ட் பண்ணிட்டா.. யாரை? இந்தியன் கேர்ள்ஸை. அதனால அந்தப் பொண்களோட அப்பா, அம்மா எல்லாம் பெண்களை வீட்ல சேர்த்துக்க மாட்டேன்னுட்டா.. சொந்தப் பெண்ணையே வாங்கிக்க மாட்டேன்னுட்டா. அப்புறம் ரொம்பக் கஷ்டப்பட்டு நாங்க ஃபோர்ஸ் பண்ணி, உங்க பொண்ணு தானங்க, இந்த மாதிரி ஆயிடுச்சு. என்ன பண்றது, நீங்க ஏத்துக்கத்தான் வேணும்னு சொல்லி ஒப்படைச்சிட்டு வருவோம். இல்லன்னா என்ன பண்றது? அந்தப் பெண்கள் எல்லாம் தெருவுல தான் நிக்கனும்! அதனால அவங்களை அவங்கவங்க குடும்பத்துல ஒப்படைச்சே ஆகனும், வேற வழி இல்லை. அந்த மாதிரி ஆயிடுத்து.

அப்படின்னா, வெள்ளைக்காரங்க நம்ம நாட்டை விட்டு விட்டு வெளியேறும் போது, இந்தியாவை பயன்படுத்திட்டு அப்படி அப்படியே போட்டது போட்டபடி போகல, இந்த மாதிரி நிறைய நல்ல விஷயங்களையும் செய்து வைச்சிட்டு தான் போனாங்களா?

ஆமாம், நிறைய உதவிகளும் செஞ்சாங்க. அப்படியே போகல.

நம்ம வரலாற்றுல வெள்ளைக்காரன் ஆட்சிக்காலம் ரொம்ப கொடுமையா இருந்ததுன்னு படிக்கிறோமே ஸ்கூல்ல எல்லாம்?

இல்ல, அப்போ ரொம்ப ஈஸி லைஃப், லக்ஸுரியஸ் லைஃப். எவ்ரிபடி லிவ்டு இன் ஹேப்பினஸ். ஒரு மனுஷனும், இந்தியா இண்டிபெண்டன்ஸ் வந்துதே, இந்த பொலிடீசியன்ஸ் தான் ஜாஸ்தி ஹெல்ப் பண்ணாங்களே ஒழிய ஆஃபீஸர் வேலை பண்ணிண்டிருந்தவா ஒருத்தரும் கவனிக்கவே இல்லை அதை. எனக்குத் தெரிஞ்சவரைக்கும் எங்க அப்பா, அம்மால்லாம் கவர்மெண்ட்ல வேலை பண்ணிண்டிருந்தா, அவாள்லாம் கவனிக்கல, பேப்பர்ல படிச்சா அவ்ளோ தான் ஏதோ ஒன்னு நடந்துட்டுப் போறது அப்படின்னு அதோட விட்டுட்டா. தே வேர் ஆல் வெரி ஹேப்பி டியூரிங் த பிரிட்டிஷ் ரூல். டிராயிங் வெரிகுட் சேலரி. சின்ன சேலரியா இருந்தாலும் லைஃப் வாஸ் ஸோ சீப் இன் தோஸ் டேய்ஸ். மாசச்செலவு 400 ஐத் தாண்டாது. மாசமான எலெக்ட்ரிசிட்டி பில் 15 ரூபா தாண்டாது. ஆனா, இன்னைக்குப் பாருங்க சம்பளம் எவ்வளவு நிறைய வருது. ஆனா, என்ன லாபம், யாருக்கும் அது போறாது. இப்ப யாரும் பொறுப்பா வேலை பண்றதே இல்லை. ஆனா, பிரிட்டிஷ்காரன் காலத்துல எல்லாமே பெர்ஃபெக்டா இருக்கும். இத்தனை மணிக்கு லஞ்ச் ன்னா அத்தனை மணிக்கு லஞ்ச்க்குப் போவான். இத்தனை மணிக்கு திரும்ப சீட்ல இருக்கனும்னா அத்தனை மணிக்கு கரெக்டா சீட்ல இருப்பான். ஒரு நிமிஷம் முன்னால, பின்னால நேரம் விரயமாகாது. அதெல்லாம் வெள்ளைக்காரன் காலத்துல தான் நடக்கும். இப்ப அதெல்லாம் கிடையாது. இவங்க எங்க வேலை செய்யறாங்க. எல்லாம் ஃபிராடு. ஒருத்தன் தப்பு பண்ணினா உடனே உள்ள போடனும். அதெல்லாம் பண்றதில்லை. இப்ப நான் எனக்கு ஏற்பட்ட வுமன்ஸ் ஹாஸ்டல் பிரச்சினையைப் பத்தி சொன்னேன்ல, அவங்க பண்ணது தப்பு, ஆனா, அவங்களை ஒன்னும் பண்ண முடியலை. அரசு அதிகாரிங்க எல்லாம் இங்க லஞ்சம் வாங்கறாங்க. அதை நான் சொல்லல.. சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் சொல்லிருக்கார். 'Nothing can be done in this government without payment of money'அவ்ளோ தான். இன்னி வரைக்கும் அதான்.

அப்போ, வெள்ளைக்காரங்க ஆண்ட காலத்தில சட்டம், ஒழுங்கு எல்லாம் நல்லா இருந்ததுன்னு சொல்றீங்களா?

இல்ல, ஒருத்தரும் காலணா வாங்கல. மினிஸ்டர்ஸ் எல்லாம் இவாளப் போல அங்க, இங்க சுத்த மாட்டான். கரெக்ட்டா 1 மணிக்கு லஞ்ச்சுக்குப் போவான், 2 மணிக்கு சீட்ல இருப்பான். ஒரு நிமிஷம் இந்தாண்ட, அந்தாண்ட இல்லை. அவன் வேலை ஆஃபீஸ்ல இருக்கு, வெளியில இல்ல. இவங்க எல்லாம் பாருங்க வெளியில சுத்திட்டு இருக்காங்க. ஒன்னும் பிரயோஜனம் இல்ல.  பிரிட்டிஷ் காலத்துல நேரம் தவறாமை ரொம்ப பெர்ஃபெக்ட்டா இருந்தது, அதை பீட் பண்ண முடியாது. அதனால தான் நான் இன்னைக்கும் சொல்றேன். அவன் திரும்பி வந்தா நல்லாருக்கும்னு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com