இனி வாட்ஸ் ஆப்அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரம்! 

மக்களின் அன்றாட வாழ்க்கையில் சமூக வலைதளங்கள் சங்கமித்துவிட்டன. அதிலும் வாட்ஸ்ஆப் இல்லை
இனி வாட்ஸ் ஆப்அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரம்! 

மக்களின் அன்றாட வாழ்க்கையில் சமூக வலைதளங்கள் சங்கமித்துவிட்டன. அதிலும் வாட்ஸ்ஆப் இல்லை என்றால் ஸ்மார்ட் போன் இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டது. தனித்தனியாக இயங்கி வந்த வாட்ஸ்ஆப் பயன்பாடு, தற்போது குழுக்களாக (குரூப்) மாற்றம் கண்டுள்ளன. 

இந்தக் குழுக்களில் நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தால் அதைப் படிக்கவே ஒரு நாள் போதாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள் ஆகியவை தங்களது அறிவிப்புகளை வெளியிட இந்த வாட்ஸ் ஆப் குழுக்களைப் பயன்படுத்துகின்றன. அப்படி வெளியிடப்படும் அறிவிப்புகளுக்கு உறுப்பினர்கள் எதிர் கருத்துகளைத் தெரிவித்தால் அதைத் தடுக்க முடியாத நிலை இருந்து வந்தது. 

இதற்கு தீர்வு காணும் வகையில் வாட்ஸ்ஆப் குழுவில் உள்ள 'அட்மின்'களுக்கு மட்டும் தகவல்களை அனுப்பும் அதிகாரம் அளிக்கும் சேவையை வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ளது. இதைச் செயல்படுத்த, சம்பந்தப்பட்ட வாட்ஸ் ஆப் குழுவுக்குள் சென்று 'குரூப் இன்போ' வை கிளிக் செய்து, 'குரூப் செட்டிங்ஸ்' - உள்ளே  செல்ல வேண்டும். பின்னர் 'சென்ட் மெசேஜஸ்' கிளிக் செய்து 'ஓன்லி அட்மின்'-ஐ தேர்வு செய்து விட்டால் போதும். 

இதன் மூலம் அந்தக்குழுவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அட்மின்கள் மட்டுமே தகவல்களை அனுப்ப அனுமதி பெற்றவர்களாவர். இந்த வசதி தனி ஒருவரின் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எனினும், கட்டுக்கடங்காமல் செல்லும் செயல்களுக்கு கட்டுப்பாடு ஒன்றே தீர்வு என்பதை வாட்ஸ் ஆப் நிறுவனம் கருதியே, அட்மின்களுக்கு இந்த உரிமையை வழங்கி உள்ளது என்றே கூறலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com