வாட்ஸ் அப் குழுமங்களுக்கான புதிய பிரைவஸி செட்டிங் தொழில்நுட்பம்!

Account > Privacy >Groups>  - எனும் பிரிவுக்குச் சென்று அங்கு கீழ்காணும் ஆப்ஷன்களில் ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டும்.
வாட்ஸ் அப் குழுமங்களுக்கான புதிய பிரைவஸி செட்டிங் தொழில்நுட்பம்!

வாட்ஸ் அப் குழுமங்களைப் பொருத்தவரை பலருக்கும் சில குறைகள் உண்டு. யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் வாட்ஸ் அப் குழுமங்களில் சேர்க்கலாம் என்றொரு நிலை இருந்தது. அப்படி சேர்த்து விட்டால் அந்தக் குழுமங்களில் பகிரப்படும் தகவல்கள் அத்தனையும் குழும உறுப்பினர் என்ற பெயரில் உங்களையும் வந்தடையும். இதில் முதல் பிரச்னை நமக்கு அதில் ஆர்வம் இருப்பது, இல்லாதது. அடுத்ததாக ஸ்டோரேஜ் பிரச்னை வேறு. நமது ஸ்மார்ட் ஃபோனின் ஸ்டோரேஜை விரைவில் கபளீகரம் செய்யும் சக்தி வாட்ஸ் அப் குழுமம் வாயிலாக வரக்கூடிய விடியோ மற்றும் புகைப்படங்களுக்கு உண்டு.

எனவே பலரும் இந்த வாட்ஸ் அப் குழும விவகாரத்தில் பிரைவஸி செட்டிங்கில் மேலும் பல முன்னேற்றங்கள் வேண்டும் என்று விரும்பினர். அதையொட்டி வாட்ஸ் அப் நிறுவனம் இன்று புதிதாக பிரைவஸி செட்டிங் ஆப்ஷன் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

அதன்படி உங்களது வாட்ஸ் அப்பின்  ‘செட்டிங்கை’ திறந்து அதில் 

Account > Privacy >Groups> 

- எனும் பிரிவுக்குச் சென்று அங்கு கீழ்காணும் ஆப்ஷன்களில் ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டும்.

“Nobody,” “My Contacts,” or “Everyone.”  - 
 

இவற்றில் No Body ஐத் தெரிவு செய்தால் உங்களை குழுமங்களில் சேர்க்க நினைப்பவர்கள் உங்கள் அனுமதி கிடைத்த பிறகே சேர்க்க முடியும். My Contact  ஐத் தெரிவு செய்தால் உங்களது கணக்கில்  இருக்கும் நபர்களது வாட்ஸ் அப் குழுமச் செய்திகள் மட்டுமே உங்களை வந்தடையும். அதாவது அந்தக் குழுமங்கள் மட்டுமே உங்கள் பார்வையில் படும். அவர்களால் மட்டுமே உங்களை குழுமங்களில் சேர்க்க முடியும்.

Everyone - ஐத் தெரிவு செய்தால் உங்களை யார் வேண்டுமானாலும் குழுமங்களில் சேர்க்கலாம். 

வாட்ஸ் அப்பின் இந்தப் புதிய செட்டிங் வசதி வாட்ஸ் அப் பயனாளர்களின் திருப்தியை சம்பாதிக்கலாம்.

இனிமேல் குழுமங்களில் நிரம்பி வழியும் செய்திகளின், தகவல்களின், புகைபடப் பகிர்தல்கள் குறித்த அச்சமின்றி பயனாளர்கள் தங்களது வாட்ஸ் அப் கணக்கை திறமையாகக் கட்டுப்படுத்தவும், கையாளவும் முடியும் என்பது வாட்ஸ் அப் பயனாளர்களுக்கான நற்செய்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com