ஜப்பானைச் சேர்ந்த பிரபல கேமரா தயாரிப்பு நிறுவனமான ‘ப்யூஜிபில்ம்’ தன்னுடைய புதிய தயாரிப்பான ’மிர்ரர் லெஸ்’ கேமராவை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.
‘ப்யூஜிபில்ம் ஜிஎஃப்எக்ஸ் 50 எஸ்2’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கேமரா மிகத் துல்லியமாக ஒளியை உள்வாங்கும் திறனுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் இந்திய இயக்குனர் கோஜி வாதா , ‘ ப்யூஜிபில்ம் நிறுவனம் ஜிஎஃப்எக்ஸ் 50 எஸ்2 கேமராவை உலகம் முழுவதும் அறிமுகம் செய்ய இருக்கிறது. நிச்சயமாக உலகப் புகைப்பட வரலாற்றில் மைல்கல்லாக இது அமையும்’ எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் ஆரம்ப விலையாக ரூ.3,79,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
ப்யூஜிபில்ம் ஜிஎஃப்எக்ஸ் 50 எஸ்2 சிறப்பம்சங்கள்:
* 51.4 எம்பி லார்ஜ் ஃபார்மட் சென்சார்
* 900 கிராம் எடை
*குறைந்த ஒளியிலும் துல்லியத்துடன் பதிவு செய்யும் லென்ஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


