ஒரே நாளில் டெலிகிராமுக்கு 7 கோடி புதிய பயனாளர்கள்

வாட்ஸ் ஆப் , ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் கடந்த(அக்-4) இரவு உலகம் முழுவதும் 6 மணி நேரத்திற்கு மேல் செயல்படாமல் முடங்கியதால் டெலிகிராம் செயலியில் 7 கோடி புதிய பயனர்கள் இணைந்திருக்கிறார்கள்.

உலகில் அதிகப் பயனாளர்களைக் கொண்ட செயலிகளில் வாட்ஸ் ஆப் , ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை தவிர்க்க முடியாத சமூக வலைதளங்களாக மாறியிருக்கின்றன.

இந்நிலையில் கடந்த அக்-4 ஆம் தேதி இரவு திடீரென இந்த செயலிகள் உலகம் முழுவதும் முடங்கியது. ஒரே நேரத்தில் இவை மூன்றும் செயல்படாததால் பல கோடிப் பயனாளர்கள் திணற ஆரம்பித்தனர். பின் செய்திகளை அனுப்பும் இன்னொரு செயலியான டெலிகிராமில் ஒரே நாளில் 7 கோடி பேர் இணைந்ததாக அதன் தலைமைச் செயல் அதிகாரி பாவெல் துரோவ் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர் , ‘ புதிதாக டெலிகிராமில் இணைந்தவர்களுக்கு ‘ஹாய்’ தெரிவித்துக் கொள்கிறேன். இத்தனை ஆண்டுகளில் பயனாளர்கள் டெலிகிராமை நோக்கி வந்து கொண்டிருப்பது மகிழ்சியைத் தருகிறது. முன் எப்போதும் இல்லாத தினசரி வளர்ச்சியில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.புதிதாக ஒரே நாளில் 7 கோடி பேர் டெலிகிராமை தரவிறக்கம் செய்திருக்கிறார்கள்’ எனத் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com