தடுப்பதென்றால் எப்படி? நாங்கள் தான் ஏற்கனவே கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை ஒழிக்க கருப்பு& சிவப்பு ஹிட் பூச்சிக் கொல்லி மருந்துகள், டோமெக்ஸ் ஃபீனால், ஹார்பிக், லைஸால், டெட்டால், கொசுக்களை ஒழிக்க குட்நைட் ஆக்டிவ், ஆல் அவுட், டார்ட்டாஸ் கொசுவத்திச் சுருள் வரை எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்துக் கொண்டு தானே இருக்கிறோம்... அப்படியும் அவையெல்லாம் எங்கே ஒழிகின்றன. அந்த மருந்துகளைப் பயன்படுத்தி எங்களுக்குத் தான் விஷத்தன்மை அதிகரிக்கிறதே தவிர அவையெல்லாம் இந்த மருந்துகளை ஊட்டச்சத்து பானங்களைப் போல பருகி விட்டு மேலும் உரத்துடன் பல்கிப் பெருகி தங்களது புஜபல பராக்கிரமத்தை முன்னை விட அதிகமாக அல்லவா காட்டத் தொடங்கி விடுகின்றன?! இவற்றின் தொல்லைகளில் இருந்து எப்படித்தான் தப்புவதோ தெரியவில்லையே! என்று தலையில் கை வைத்து உட்கார்ந்து விடுகிறீர்களா?! இனி அப்படியொரு நிலை உங்களுக்கு வேண்டவே வேண்டாம்.