Tamil News LIVE: மகாராஷ்டிரம்: விநாயகர் சிலை கரைக்கும்போது நேர்ந்த விபரீதம், 20 பேர் பலி

முதன்மைச் செய்திகள் அனைத்தும் உடனுக்குடன் இங்கே.. தினமணி.காம்-உடன் இணைந்திருங்கள்.
Tamil News LIVE: மகாராஷ்டிரம்: விநாயகர் சிலை கரைக்கும்போது நேர்ந்த விபரீதம், 20 பேர் பலி

முதன்மைச் செய்திகள் அனைத்தும் உடனுக்குடன் இங்கே.. தினமணி.காம்-உடன் இணைந்திருங்கள்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி!

தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று அமலுக்கு வந்துள்ள நிலையில் ஆண்டுதோறும் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விரிவாகப் படிக்க...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் வருகிற அக்டோபர் 11 முதல் அக்டோபர் 25 ஆம் தேதி வரை 15 நாள்கள் பட்டாசு விற்பனை செய்யப்படும் 

என்று சுற்றுலாத் துறை அறிவித்துள்ளது. விரிவாகப் படிக்க...

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு இன்று அமலுக்கு வந்தது!

தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.  தமிழகத்தில் ரூ.55 முதல் ரூ.1,130 வரை மின் கட்டணத்தை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி, 101 யூனிட்கள் முதல் அனைத்து நிலைகளிலும் மின் கட்டணம் உயா்த்தப்படுகிறது. விரிவாகப் படிக்க...

இயக்குநர் பாரதிராஜாவை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பிய பாரதிராஜாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்திற்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், பாரதிராஜாவிடம் உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார். விரிவாகப் படிக்க

அண்ணா பல்கலை மீது மாணவர்கள் ஆர்வம்; காலியிடமே இல்லாத வகையில் நடவடிக்கை: க. பொன்முடி

அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர அதிக மாணவர்கள் ஆர்வம் காட்டுவதாகவும், இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்கள் காலியாக இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி கூறியுள்ளார்.

மாற்றி யோசித்ததால்.. விவசாயியாக மாறி சொந்த ஊருக்கு பெருமை சேர்த்த பட்டதாரி

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஒருவர், கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக தனியார் நிறுவனத்தில் சேராமல், மாற்றி யோசித்தார்.

ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஆஸி. கேப்டன் ஓய்வு

ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய டி20, ஒருநாள் அணிகளின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் கூறியுள்ளார்.

35 வயது ஃபிஞ்ச், ஆஸி. அணிக்காக 2011 முதல் 5 டெஸ்டுகள், 145 ஒருநாள், 92 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஆஸ்திரேலிய டி20, ஒருநாள் அணிகளின் கேப்டனாகவும் உள்ளார்.

நாட்டில் புதிதாக 5,554 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 18 பேர் பலி

நாட்டில் ஒரேநாளில் புதிதாக 5,554  பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 18 பேர் பலியாகியுள்ளனர். 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,554  பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,44,90,283 ஆக உள்ளது.

பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது!

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று(சனிக்கிழமை) தொடங்கியது. 

தமிழகத்தில் பிளஸ் 2 முடித்த மாணவா்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பில் உள்ள பொறியியல் கல்லூரிகளில், பி.இ. - பி.டெக். படிப்பதற்கான இணையவழி கலந்தாய்வை தமிழக உயா்கல்வித்துறை சாா்பில், தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் நடத்துகிறது.

2047-ல் இந்தியா பொருளாதார அளவில் பெரும் சக்தி மிக்க நாடாக மாறும்: மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன்

2047ல் இந்தியா பொருளாதார அளவில் பெரும் சக்தி மிக்க நாடாக மாறும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2047-ல் இந்தியா பொருளாதார அளவில் பெரும் சக்தி மிக்க நாடாக மாறும்: மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன்

2047ல் இந்தியா பொருளாதார அளவில் பெரும் சக்தி மிக்க நாடாக மாறும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

204-ல் இந்தியா பொருளாதார அளவில் பெரும் சக்தி மிக்க நாடாக மாறும்: மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன்

2047ல் இந்தியா பொருளாதார அளவில் பெரும் சக்தி மிக்க நாடாக மாறும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

திமுக ஆட்சிக்கு வந்ததற்கு இவர்கள்தான் முழுக் காரணம்: முதல்வர் ஸ்டாலின் ஓபன் டாக்

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சி அமைந்ததற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்தான் காரணம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

விராட் கோலி என்னைவிட அதிக திறமைசாலி, முன்னாள் இந்திய வீரர் புகழாரம்

ஆசியக் கோப்பையில் அதிரடியாக சதமடித்த விராட் கோலிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரரும், பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார்.

குஜராத் மாற்றத்தை விரும்புகிறது: அரவிந்த் கேஜரிவால்

குஜராத் மாற்றத்தை விரும்புவதாகவும், விரைவில்  தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குஜராத்திற்கு பயணம் மேற்கொள்வார் எனவும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

நாளை மகாகவி நாள் கடைபிடிக்கப்படும்: தமிழ்நாடு அரசு

மகாகவி பாரதியாரின் நினைவு நாளான நாளைய தினம் மகாகவி நாள் என கடைபிடிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

மகாராஷ்டிரம்: விநாயகர் சிலை கரைக்கும்போது நேர்ந்த விபரீதம், 20 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் வெவ்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்வின்போது நேர்ந்த விபரீதத்தில் 20 பேர் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கார் கிணற்றுக்குள் விழுந்து மூவர் பலி: காரை ஓட்டிச் சென்ற கல்லூரி மாணவர் மீது வழக்கு

கிணற்றுக்குள் கார் பாய்ந்து 3 பேர் பலியான விபத்தில், காரை ஓட்டிச் சென்ற கல்லூரி மாணவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர் தொண்டாமுத்தூர் காவல்துறையினர்.

பிரிட்டன் மன்னராக சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

பிரிட்டனின் நீண்ட கால அரசி எலிசபெத் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானதைத் தொடர்ந்து, புதிய மன்னராக இளவரசர் சார்லஸ் (73) அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டார்.

பெங்களூருவில் பறக்கும் பேருந்து: நிதின் கட்கரி யோசனை

பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பறக்கும் பேருந்து திட்டம் கொண்டு வருவது குறித்து தொழில்நுட்ப அறிக்கையை தயார் செய்யவிருப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

காதலியின் திருமணத்துக்கு வந்த காதலன் செய்த விபரீதம்: நூலிழையில் தப்பித்த மாப்பிள்ளை

தான் காதலித்த பெண்ணின் திருமணத்துக்கு வந்த காதலன், யாரும் எதிர்பாராத வகையில் ஐயரிடமிருந்து தாலியைப் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணி எலிசபெத்தின் உருவப்படம் பொறித்த ரூபாய் நோட்டுகள் செல்லுமா?

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக் குறைவால் காலமானார். இதையடுத்து அவரது புகைப்படம் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பல ஆண்டுகளாக பிரிட்டனில் அச்சாகும் ரூபாய் நோட்டுகளிலும், நாணயங்களிலும் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.

தாய் மொழியில் கல்வி கற்பது சிறந்தது: ஆளுநர் ஆர்.என்.ரவி 

செங்கல்பட்டு ஸ்ரீ கோகுலம் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற 2020 தேசிய கல்விக் கொள்கை கருத்தரங்கு விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி தாய் மொழியில் கல்வி கற்பது சிறந்தது என்றார்.

லோயர்கேம்ப் பென்னிகுயிக் சிலைக்கு மாலை அணிவித்த ஆட்சியர் 

தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலைக்கு சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் மாலை அணிவித்தார். 

எமரால்டு அணையில் உபரி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

 எமரால்டு அணையில் உபரி நீர் திறக்கப்படுவதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

நான்காவது தொழில் புரட்சியை நோக்கி இந்தியா முன்னேறுகிறது: பிரதமர் மோடி

இன்று மத்திய-மாநில அறிவியல் மாநாட்டை பிரதமர் விடியோ கணொலி வாயிலாக தொடக்கி வைத்தார். நான்காவது தொழில் புரட்சியை நோக்கி இந்தியா முன்னேறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

75 ஆண்டுகளுக்குப் பின்.. பிரிவினையின் போது பிரிந்த சகோதர-சகோதரி ஒன்று சேர்ந்த தருணம்

இந்தியாவில் ஜலந்தர் பகுதியைச் சேர்ந்த சீக்கியர் அமர்ஜித் சிங், பாகிஸ்தானில் வசித்து வரும் தனது முஸ்லிம் சகோதரியை 75 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த தருணம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது.

விசாரணைக்கு அழைக்க எழுத்துப்பூர்வ சம்மன் அவசியம்: சென்னை உயர் நீதிமன்றம்

 விசாரணைக்கு அழைக்க  எழுத்துப்பூர்வமாக சம்மன் அனுப்பவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் மீன் அருங்காட்சியகம்: 2 ஆண்டுகளுக்கு பிறகு பார்வையாளர்களுக்கு அனுமதி

 வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள  மீன் அருங்காட்சியகம் புதுபிக்கப்பட்ட நிலையில்,  2 ஆண்டுகளுக்கு பிறகு பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைவு

 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.224 குறைந்து  ரூ.37,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.28 குறைந்து  ரூ.4740-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

யு.எஸ். ஓபன்: இறுதிச்சுற்றில் மோதும் வீரர்கள்

யு.எஸ். ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றுக்கு கார்லஸ் அல்காரஸ், காஸ்பர் ருட் ஆகிய இருவரும் தகுதியடைந்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com