
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகேயுள்ள கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 2-ஆவது கட்டமாக வடமதுரை, குஜிலியம்பாறை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, பழனி, கொடைக்கானல் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களின் வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது. 1,371 ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளில் 306 பதவிகள் போட்டியின்றி நிரப்பப்பட்டன.
மீதமுள்ள 1,065 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த 7 ஒன்றியங்களில் 162 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளில் 3 பதவிகள் போட்டியின்றி நிரப்பப்பட்டன. 107 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிகளுக்கும், 10 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒன்றியத்துக்கு உட்பட்ட மன்னவனூர் ஊராட்சி கவுஞ்சி கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.