
தமிழகத்தில் திங்கள்கிழமை நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலின் 2-ஆம் கட்ட வாக்குப்பதிவின் போது 100 வயதுகொண்ட முதியோர் தங்களின் தள்ளாத வயதிலும் மனம் தளராமல் வந்து வாக்களித்துச் சென்றனர்.
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியம் வில்லூர் ஊராட்சி ஆசாரித்தெருவைச் சேர்ந்த 100 வயது மூதாட்டி சீனியம்மாள் உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றினார்.
தள்ளாத வயதிலும் ஜனநாயக கடமையை நிறைவேற்ற தனது பாட்டியை நீலகிரி மாவட்டம் தும்மனட்டி வாக்குச்சாவடி மையத்துக்கு தனது பேரன் அழைத்து வந்தார். இவை அங்கு காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.