
திருச்சி மாவட்டம், முசிறி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது புலிவலம் ஊராட்சி. இங்கு இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு திங்கள்கிழமை நடைபெற்றது.
இதற்காக புலிவலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆண்கள், பெண்கள் என இரு பாலருக்கமான இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க வந்த பெற்றோர்களுடன் அவர்களது குழந்தைகள் பலரும் வாக்குச் சாவடிக்ககு வந்திருந்தனர்.
தங்களது பெற்றோர் ஜனநாயக கடமையாற்ற வரிசையில் காத்திருந்த வேளையில், பள்ளி வளாகத்தில் இருந்த சறுக்கு விளையாட்டில் சிறுவர்கள் அனைவரும் துள்ளிக்குதித்து மகிழ்ச்சியுடன் விளையாடினர்.
வாக்குப்பதிவு பரபரப்பு, போலீஸார் கண்காணிப்பு என எதையும் கண்டு கொள்ளாமல் தங்கள் விருப்பம்போல் விளையாடி மகிழ்ந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.