புதுக்கோட்டை: 2ம் கட்ட தேர்தலில் வாக்களிக்கவிருக்கும் 5.78 லட்சம் பேர்
By -சா. ஜெயப்பிரகாஷ் | Published On : 26th December 2019 02:39 PM | Last Updated : 26th December 2019 02:39 PM | அ+அ அ- |

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக வரும் டிச. 30ஆம்தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவில் மொத்தம் 5,78,044 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இவர்களில் 2,87,181 பேர் ஆண்கள், 2,90,851 பேர் பெண்கள், 12 பேர் திருநங்கைகள்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் டிச. 30ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.
மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் அறந்தாங்கி, அரிமளம், ஆவுடையார்கோயில், பொன்னமராவதி, மணமேல்குடி, திருமயம், திருவரங்குளம் ஆகிய 7 ஒன்றியங்களுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில், 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களுக்கு 58 பேர் போட்டியிடுகின்றனர்.
அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்- 26, அரிமளம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்- 13, ஆவுடையார்கோயில்- 15, பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்- 16, மணமேல்குடி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்- 15, திருமயம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்- 15, திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்- 25 என மொத்தம் 125 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
மேலும், சுமார் 2 ஆயிரம் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 262 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இதற்காக மொத்தம் 1,245 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 10 ஆயிரம் பணியாளர்கள் வாக்குச்சாவடிகளில் பணியமர்த்தப்படவுள்ளனர்.
வாக்குப்பதிவு திங்கள்கிழமை (டிச. 30) காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது.